"என் வருங்கால கணவர் கல்யாணத்திற்கு முன்பே உடலுறவுக்கு ஆசைப்படுகிறார்" இளம்பெண்ணுக்கு வந்த சோதனை!!
திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவர் உடலுறவு கொள்ள விரும்புவதால் குழம்பி தவிக்கும் பெண்ணின் பகிர்வை இங்கு காணலாம்.
"எனக்கு 20 வயது. கொஞ்ச நாள்களில் எனக்கு திருமணம் நடைபெறவுள்ளது. எல்லாம் ஓகே தான். ஆனால் என் வருங்கால கணவர் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்ள ஆசைப்படுகிறார். இது சரியா? தவறா? என கூட தெரியவில்லை. கொஞ்சம் விளக்குங்கள்" என அந்த பெண் கேட்டுள்ளார்.
மனநல ஆலோசகர் சொன்ன ஆலோசனை: சில ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய கலாசாரத்தில் இதற்கு இடமில்லை. மேற்கத்திய நாடுகளில் இது சகஜம். நீண்ட கால உறவுகளை பேணி காக்க, நீங்கள் திருமணம் வாழ்க்கையில் சில விஷயங்களை கவனமாக கையாளவேண்டும். உங்கள் இணையிடம் அன்பும் பாசமும், இரக்கமும், கரிசனமும் தேவை. இவை அனைத்தும் உறவை பலப்படுத்தும்.
நீங்கள் உங்கள் துணையிடம் நேர்மையாக இருக்கவேண்டும். உங்கள் இந்திய பாரம்பரிய மதிப்புகளுடன் திருமணம் செய்துகொள்வதும், மேற்கத்திய அமைப்பை ஏற்றுக்கொள்வதும் உங்கள் விருப்பம். உங்கள் துணையிடம் இது குறித்து உரையாடுங்கள்.
இரண்டாவதாக திருமணத்திற்கு முந்தைய உடலுறவு உங்களுக்கு ஏற்றுக்கொள்ள சங்கடமாக இருந்தால், உங்கள் துணையிடம் அதை வெளிப்படையாக சொல்லுங்கள். திருமணத்திற்கு முந்தைய உடலுறவில் அவருக்கு ஏன் விருப்பம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பரஸ்பரம் பேசி முடிவெடுப்பது தான் எல்லாவற்றுக்கும் நல்லது.
இதையும் படிங்க: Relationship Tips : உடலுறவில் திருப்தி அடைய 5 செக்ஸ் டிப்ஸ் இதோ.. !
ஒருவருடன் உடல் மனம் இரண்டும் இணைய வேண்டும் என்றால் அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி அவரை நீங்கள் முழுமையாக நம்பவில்லை எனில் திருமணத்திற்கு முன் உறவு வேண்டாம். பொறுமையாக திருமணத்திற்கு பின் அனுபவியுங்கள்.
இதையும் படிங்க: உங்க துணையுடன் செக்ஸ் வைக்குறத விட இது முக்கியம்... இந்த 1 விஷயம் செய்தால் அவ்ளோ நன்மை!!
இறுதியில், உங்களுக்கான எல்லைகளை நீங்கள்தான் உருவாக்கி கொள்ள வேண்டும். உங்கள் இருவருக்குள்ளும் நல்ல உணர்ச்சிபூர்வமான நெருக்கமான உறவை விரும்பினால், உங்கள் துணையை கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். எல்லாம் உங்கள் இருவர் எண்ணத்திலும் அவர் மேல் உங்களுக்குள்ள நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D