Asianet News TamilAsianet News Tamil

Vijay : சினிமாவை விட்டு விலகும் விஜய்.. "அதனால் கலைக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை" - ஓப்பனாக பேசிய நடிகை கஸ்தூரி!

Actress Kasthuri : தளபதி விஜய் அவர்கள் விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் சினிமாவை விட்டு விலகுவது குறித்து பிரபல நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்திருக்கிறார். 

Actress Kasthuri Controversial statement about thalapathy vijay leaving cinema industry ans
Author
First Published Jun 18, 2024, 11:22 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராகவும், உச்ச நட்சத்திரமாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இன்று கோலிவுட் உலகில் ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாயை தாண்டி சம்பளம் வாங்கும் ஒரே நடிகராகவும் அவர் திகழ்ந்து வருகிறார். அவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இங்கு உள்ளது. 

கோலிவுட் உலகில் சில பிளாப் திரைப்படங்களை அவர் கொடுத்திருந்தாலும், அதை ஈடுகட்டும் அளவிற்கு, இரண்டு மடங்கு வெற்றி திரைப்படங்களை, அதுவும் மெகா ஹிட் வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் தான் தளபதி விஜய். தற்பொழுது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

45 வயசுல மேரேஜ் பண்ணி... 25 வயசு மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் பிரேம்ஜி! சிக்கிள்ஸை வெறியேற்றும் போட்டோஸ்!

அதே நேரம், வருகின்ற 2026ம் ஆண்டு தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அவர் களம் காண உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் கலை உலகை விட்டு விலகுவது குறித்து பிரபல நடிகை கஸ்தூரி அவர்களிடம் கேட்ட பொழுது, "விஜய் கடந்த 30 ஆண்டுகளாகத் தான் இந்த கலை உலகில் பயணித்து வருகிறார். ஆனால் இந்த சினிமா உலகம் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது". 

"ஆகவே அவர் திரைத்துறையை விட்டு விலகுவது கலைத்துறைக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்று கூறி ஒரு பெரிய பிரளயத்தையே கிளப்பியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். நடிகர் விஜய் சினிமாவை விட்டு விளக்குறார் என்பது, சாதாரண ஒரு விஷயமாக இருந்தாலும், கோலிவுட் உலகின் வியாபாரம் பெரிய அளவில் வீழ்ச்சியடையும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

இந்த சூழலில் கஸ்தூரியின் இந்த சர்ச்சை கருத்துக்கு, தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பது தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒரு விஷயமாகும்.

Vidharth : கோலிவுட்டில் மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்.. கொலையாளியை தேடும் விதார்த் - "லாந்தர்" ட்ரைலர் இதோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios