- Home
- Gallery
- 45 வயசுல மேரேஜ் பண்ணி... 25 வயசு மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் பிரேம்ஜி! சிக்கிள்ஸை வெறியேற்றும் போட்டோஸ்!
45 வயசுல மேரேஜ் பண்ணி... 25 வயசு மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் பிரேம்ஜி! சிக்கிள்ஸை வெறியேற்றும் போட்டோஸ்!
இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜியின் திருமணம் கடந்த வாரம் வெளியான நிலையில், தற்போது இவர் மனைவியுடன் ரொமான்டிக்காக எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

premgi
இசையமைப்பாளர் இளையராஜா குடும்பத்தில் இருந்து வந்து.. ஒரு காமெடி நடிகராக தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரேம்ஜி. தன்னுடைய பெரியப்பா - அப்பாவை போல ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்கிற கனவில், வெளிநாட்டுக்கெல்லாம் சென்று இசை குறித்த படிப்பை பயின்று வந்த பிரேம்ஜி.. தான் இசையமைத்த படங்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில், நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
premgi
அந்த வகையில், புன்னகை பூவே, விசில், கண்ட நாள் முதல், வல்லவன் போன்ற படங்களில் நடிக்க துவங்கினார். நடிப்பில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற பிரேம்ஜி-யின் கனவை நிறைவேற்றியது இவரின் சகோதரரான வெங்கட் பிரபு தான். தான் இயக்கும் அணைத்து படங்களிலுமே தன்னுடைய தம்பிக்கு ஹீரோவுடன் பயணிக்கும் முக்கிய ரோலை கொடுப்பார்.
சுடரை பார்த்து பதறி போன இந்து! அதிர்ச்சியில் மனோகரி.. நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
Premgi
அப்படி தான் தற்போது விஜய்யை வைத்து வெங்கட் பிரபு தற்போது இயக்கி முடித்துள்ள படத்திலும்... பிரேம்ஜி மகன் தளபதிக்கு நண்பர் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், குறித்த அப்டேட் ஜூன் 22-ஆம் தேதி தளபதி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Premgi And Indhu Wedding
இது ஒரு புறம் இருக்க.. 45 வயது வரை தன்னை ஒரு முரட்டு சிங்கிள் என கூறி வந்த பிரேம்ஜி ஒருவரழியாக அண்மையில் திருமண உறவில் இணைந்தார். அதுவும் இது காதல் திருமணம் என்பது தான் பலருக்கும் அதிர்ச்சியளித்த விஷயம்.
சேலத்தை சேர்ந்த இந்து என்கிற பெண்ணை காதலித்து வந்த பிரேம்ஜி... பெற்றோர் சம்மதத்துடன் அவரையே திருமணம் செய்து கொண்டார். தம்பியின் திருமணத்தை முன்னின்று நடத்தியது தந்தை என்றாலும், தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்தது வெங்கட் பிரபு தான். பவதாரிணியின் மறைவுக்கு பின்னர் நடந்த இந்த நிகழ்ச்சியில் இளையராஜா, யுவனை தவிர ஒட்டுமொத்த குடும்பமே கலந்து கொண்டது.
தற்போது பிரேம்ஜி தன்னுடைய காதல் மனைவி இந்துவுடன்... மிகவும் ரொமான்டிக்காக எடுத்து கொண்ட போட்டோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 45 வயதில் திருமணம் செய்து இப்படி பல சிங்கிளாஸை வெற்றியேற்றி வருகிறார் என காமெண்ட்ஸை குவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.