Dhanush : சர்ச்சையோடு மும்பை வந்திறங்கிய தனுஷ்.. ஜோராக துவங்கிய "குபேரா" - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் பிக்ஸ்!
Actor Dhanush : தனது ராயன் பட பணிகளை முடித்துள்ள பிரபல நடிகர் தனுஷ் தற்போது தனது "குபேரா" பட பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார்.
Kubera
இறுதியாக இந்த ஆண்டு துவக்கத்தில் பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான, "கேப்டன் மில்லர்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் தனுஷ், தற்பொழுது தனது அடுத்த பட பணிகளை துவங்கி உள்ளார்.
Actor Dhanush
பா. பாண்டி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிகர் தனுஷ் இயக்குனராக களம் இறங்கியுள்ள திரைப்படம் தான் "ராயன்". அந்தப் பட பணிகளை முழுமையாக முடித்துள்ள தனுஷ், தனது "குபேரா" பட பணிகளை இப்பொழுது துவங்கியுள்ளார்.
Dhanush
பிரபல தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகும் "குபேரா" திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் அவர்களும் நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படப் பணிகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
Dhanush in mumbai
ஹைதராபாத் விமான நிலையத்தில் போட்டோ எடுக்க வந்த முதியவரை நாகார்ஜுனாவின் உதவியாளர் கீழ தள்ளிய தகவல் வீடியோவாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் அருகில் நின்ற தனுஷ் மீதும் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில் மும்பையில் ஜூகு பகுதியில் "குபேரா" திரைப்பட பணிகள் விறுவிறுப்பாக நடக்க துவங்கியுள்ளது.