தளபதி செம்ம ஸ்மார்ட்! 21 அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், கழக தொண்டர்கள், உள்ளிட்ட அனைவரும் ஒரேஅறிக்கையில் நன்றி!

தளபதி விஜய் தன்னுடைய 50-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து கூறிய அனைவருக்கும், செம்ம ஸ்மார்ட்டாக ஒரே அறிக்கை மூலம் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
 

Actor Vijay released a statement thanking those who wished him on his birthday mma

தமிழ் சினிமாவில் 200 கோடி சம்பளம் பெரும் ஹீரோவாக வளர்ந்துள்ள தளபதி விஜய், அதிரடியாக... தன்னுடைய சினிமா வாழ்க்கையை துறந்து, மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் இறங்க உள்ளதாக அறிந்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மாதத்திலேயே தன்னுடைய கட்சியில் பெயரான 'தமிழக வெற்றிக் கழகம்' என அறிவித்து அரசியல் பணிகளை துவங்கியுள்ளார்.

2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள, தேர்தலை சந்திக்க தயாராகி உள்ள விஜய், அதற்காக தன்னுடைய கட்சி பணிகளை மிகவும் ஸ்டாங் ஆக்கி வருகிறார். இந்நிலையில் அரசியல் கட்சி குறித்து, தளபதி கொண்டாடிய 50-ஆவது பிறந்தநாளுக்கு, ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறியது மட்டும் இன்றி... அரசியல் தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

Actor Vijay released a statement thanking those who wished him on his birthday mma

கெட்டவளாக இருந்த மனோகரி.. எழிலுக்காக இப்படி கேடுகெட்டவளா மாறி போட்ட புது நாடகம்! நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும், ஒரே அறிக்கை மூலம் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார் தளபதி. இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில மாண்புமிகு முதலமைச்சர் திரு. என்.ரங்கசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு. ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய திருமதி தமிழிசை சௌந்தரராஜன்,

Actor Vijay released a statement thanking those who wished him on his birthday mma

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய திரு. டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. கமல்ஹாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய திரு. ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு. நெல்லை முபாரக்,

சர்ச்சில் நடந்த திருமணம்! கோலிவுட்டையே பிரமிக்க வைத்த சிம்புவின் தங்கை இலக்கியா வரவேற்பு! Throw Back போட்டோஸ்

சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய திரு. கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர், மதிப்பிற்குரிய திரு. கே. அண்ணாமலை,

முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. எஸ். திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. டி. ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. சி.விஜயபாஸ்கர்,

 

சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திருமதி வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திருமதி. தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும்

என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்". என மொத்தம் 21 அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், கழக தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் குறிப்பிட்டு நன்றி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios