சர்ச்சில் நடந்த திருமணம்! கோலிவுட்டையே பிரமிக்க வைத்த சிம்புவின் தங்கை இலக்கியா வரவேற்பு! Throw Back போட்டோஸ்
பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் டி.ராஜேந்தரின் மகளும், இளம் நடிகர் சிம்புவின் தங்கை திருமண மற்றும் வரவேற்பு த்ரோ பேக் போட்டோஸ் இதோ...
தமிழ் திரையுலகில் பன்முக திறமையாளராக அறியப்படுபவர் டி.ராஜேந்தர். மயிலாடுதுறையை சேர்ந்த இவர், எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி சென்னைக்கு வந்து ஒரு துணை இயக்குனராக பணியாற்றி பின்னரே இயக்குனராக மாறினார்.
இவர் தமிழில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 1980-ஆம் ஆண்டு வெளியான ஒருதலை ராகம். ஒரு உன்னதமான காதல் காவியமான உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிப்பட இயக்குனராக டி.ராஜேந்தரை உயர்த்தியது.
தன்னுடைய முதல் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த டி.ராஜேந்தர்.. பின்னர் வசந்த அழைப்புகள், கிளிஞ்சல்கள், ரயில் பயணங்கள், நெஞ்சில் ஒரு ராகம், தங்கைக்கோர் கீதம், உயிர் உள்ளவரை உஷா, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தார்.
நடிகர், இயக்குனர் என தன்னை திரையுலகில் நிலை நிறுத்திக்கொண்டு டி.ராஜேந்தர்.. அவரின் பட படங்களில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருந்துள்ளார்.
சில படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட டி.ராஜேந்தருக்கு, சிலம்பரசன், இலக்கியா, குறளரசன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இதில் சிம்பு ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி... லிட்டில் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டதோடு பல படங்களில் நடித்து பட்டையை கிளப்பியவர். சிறுவனாக நடிக்கும் போதே இவரின் நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
பின்னர் கதாநாயகனாக 'காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமான சிம்பு, தற்போது வரை பல பெண் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஹீரோவாக உள்ளார்.
இவர் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமான போது இவரில் விரல் வித்தை, ரக்கட் லுக், மற்றும் முட்டியால் ஆடும் டான்ஸ் ஸ்டெப் போன்றவை இவரை தனித்துவமாக காட்டியது.
அதே போல் அறிமுகமான 3 வருடத்தில் முன்னனி நடிகராகவும் வளர்ந்து நின்றார் சிம்பு. இவரை தன்னுடைய படஙக்ளில் நடிக்க வைக்க போட்டி போட்ட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் பலர் உள்ளனர்.
சிம்பு வளர்ச்சியை சந்தித்து வந்த நேரத்தில்... இவரை பெயரை டேமேஜ் செய்த விஷயங்கள் இவர் சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வரமாட்டார். ஹீரோயின்ஸை காக்க வைப்பார் போன்றவை.
இதை தொடர்ந்து இவரின் காதல் விஷயமும் சிம்புவை கொஞ்சம் அசைத்து பார்த்தது. திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே ஸ்டார் நடிகரின் மகளை இவர் காதலித்ததாக கூறப்பட்டது. அவர் சத்தமில்லாமல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
பின்னர் நயன்தாரா மற்றும் ஹன்சிகாவை காதலித்த சிம்பு இந்த இரண்டு காதலிலும் தோல்வியையே சந்தித்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயற்சி எடுத்த போதிலும், இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.
ஆனால் இவரின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம் ஆகி சுமார் 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதே போல் சிம்புவும் தம்பி குறளரசனுக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
சிம்புவின் தங்கை இலக்கியா, ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிலாஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில்... அபிலாஷ் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், ஹைதராபாத்தில் உள்ள சர்ச்சில் இலக்கியாவுக்கு திருமணம் நடந்தது.
திருமணம் எளிமையாக குடும்ப உறவினர்கள் மத்தியில் மட்டுமே நடந்தாலும், டி.ராஜேந்தர் தன்னுடைய மகளுக்கு சென்னையில் உள்ள லீலா பேலஸில் மிக பிரமாண்டமாக வரவேற்பை நடத்தினார்.
இதில் கருணாநிதி, ஸ்டாலின், கமல், ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட கோலிவுட் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இலக்கியா திருமணம் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்து முடிந்த நிலையில், இவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இலக்கியாவின் திருமண வரவேற்ப்பு மற்றும் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.