- Home
- Gallery
- Sonakshi Sinha: சிவப்பு நிற பட்டு புடவையில்... வெட்க புன்னகையோடு கணவருடன் போஸ் கொடுத்த சோனாக்ஷி சின்ஹா!
Sonakshi Sinha: சிவப்பு நிற பட்டு புடவையில்... வெட்க புன்னகையோடு கணவருடன் போஸ் கொடுத்த சோனாக்ஷி சின்ஹா!
நடிகை சோனாக்ஷி சின்ஹா, நடிகர் ஜாகீர் இக்பாலை திருமணம் செய்து கொண்ட நிலையில்இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பின்னர் கணவன் - மனைவியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா நடிகர் ஜாகீர் இக்பாலை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் நேற்று நடந்த நிலையில், இவர்கள் இருவரும் கணவன் - மனைவியாக தோன்றிய புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சோனாக்ஷி சின்ஹா, இந்து மதத்தை சேர்ந்தவர். ஆனால் இவர் காதலித்து வந்த ஜாகீர் இக்பால் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர், எனவே இவர்களின் திருமணத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே சோனாக்ஷி வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
எனவே வீட்டை விட்டு வெளியேறி சோனாக்ஷி தன்னுடைய காதலை ஜாகீர் இக்பாலை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த வதந்திக்கு அண்மையில் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார் சோனாக்ஷி.
இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, 'லிங்கா' படத்தில் நடித்துள்ளதால்... தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பரிச்சியமானவர். அதே போல் சமீபத்தில் இவர் நெட்பிலிக்சில் வெளியான... சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ஹீராமண்டி தொடரில் நடித்திருந்தார் இந்த வெப் தொடரில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை குவித்தது.
இதை தொடர்ந்து திருமண வேளைகளில் பிசியாக இருந்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்த பின்னர்,மும்பையில் உள்ள பாஸ்டியனில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், சோனாக்ஷி சிவப்பு பட்டுப் புடவையில், சிந்துார், சிவப்பு பிண்டி மற்றும் மல்லிகை பூ வைத்துக்கொண்டு ட்ரடிஷ்னல் லுக்கில் காணப்பட்டார்.
அவரின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது... அவரின் முகத்தில் நிரம்பி இருந்த வெட்க புன்னகை. மேலும் சோனாக்ஷி - ஜாகீர் திருமண வரவேற்ப்பில் சல்மான் கான், கஜோல், வித்யா பாலன், ரேகா, ஹூமா குரேஷி, அதிதி ராவ் ஹைதாரி, ஆதித்யா ராய் கபூர், தபு மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அவரின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது... அவரின் முகத்தில் நிரம்பி இருந்த வெட்க புன்னகை. மேலும் சோனாக்ஷி - ஜாகீர் திருமண வரவேற்ப்பில் சல்மான் கான், கஜோல், வித்யா பாலன், ரேகா, ஹூமா குரேஷி, அதிதி ராவ் ஹைதாரி, ஆதித்யா ராய் கபூர், தபு மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.