- Home
- Gallery
- 'கருடன்' பட வெற்றியால் சூரிக்கு அடித்த ஜாக்பாட்! தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லீ கிஃப்ட் என்ன தெரியுமா?
'கருடன்' பட வெற்றியால் சூரிக்கு அடித்த ஜாக்பாட்! தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லீ கிஃப்ட் என்ன தெரியுமா?
நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற 'கருடன்' பட வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சூரிக்கு கொடுத்த காஸ்ட்லீ கிஃப்ட் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் 31-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'கருடன்'. சூரியுடன் நடிகர் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த, இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருந்தார்.
சூரி மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில், காதல் - ஆக்ஷன் என மிரட்டி இருந்த இந்த படம் விடுதலை படத்தை தொடர்ந்து வெளியாகி சூரிக்கு இரண்டாவது வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழு அண்மையில் இப்படத்தின் வெற்றி விழாவை பிரமாண்டமாக கொண்டாடியது மட்டும் இன்றி, படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Garudan
இந்த படத்தின் வெற்றி விழாவின் போது பேசிய கூறி, இந்த படத்தை தன்னை நம்பி தான் விநியோகஸ்தர்கள் வாங்குவதாக கூறினார்கள். அப்போது தான் ஹீரோவின் பங்கு ஒரு படத்திற்கு எந்த அளவுக்கு முக்கியம் என தெரிந்தது என கூறினார். மேலும் அவர்களின் நம்பிக்கையை இப்படம் காப்பாற்றி விட்டதாக கூறி நெகிழ்ந்தார்.
இப்படம் சும்மார் 20 கோடி பட்ஜட்டில் எடுக்கப்பட்டு, 50 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில்... இப்படத்தின் ஹீரோ சூரியை கௌரவிக்கும் விதமாக தயாரிப்பாளர் கே. குமார், BMW 7 சீரிஸ் சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சூரிக்கு ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.