- Home
- Gallery
- சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல்... சோனாக்ஷி சின்ஹா வரை மதம் கடந்து திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல்... சோனாக்ஷி சின்ஹா வரை மதம் கடந்து திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!
பாலிவுட் திரையுலகில் சாதி.. மதம்.. கடந்து திருமணம் செய்து கொண்ட, பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

காதலுக்கு கண் இல்லை என்பது பழமொழி... ஆனால், உண்மையில் காதலுக்கு நிறம், சாதி, மதம் என எதுமே தெரியாது. அப்படி மதம் கடந்து திருமண பந்தத்தில் இணைந்த பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஷாருக்கான் - கௌரி கான் :
பாலிவுட் கிங் காங் ஷாருகான் தன்னுடைய மனைவி கௌரி கானை, காதலித்து 1991-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கௌரி கான் பஞ்சாபை சேர்ந்த பிராமின் குடும்பத்தை சேர்ந்தவர். ஃபேஷன் டிசைனிங் துறையில் கௌரி பணியாற்றிய போது, ஷாரூக்கானுடன் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆர்யன் கான், சஹானா கான் மற்றும் ஆப்ராம் கான் என மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
சயிஃப் அலி கான்- கரீனா கபூர்
இஸ்லாம் மதத்தை சேர்ந்த சயிஃப் அலி கான், 1991-ஆம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து 2004-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற சயிஃப் அலி கான், 2012-ஆம் ஆண்டு இந்து மனதை சேர்ந்த நடிகை கரீனா கபூரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் சயிஃப் அலிகானுக்கு சாரா என்கிற மகளும், இப்ராஹிம் என்கிற மகனும் உள்ள நிலையில், கரீனா மூலம் தைமூர், ஜஹாங்கீர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜெனிலியா - ரிதோஷ் தேஷ்முக்:
பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன், சச்சின் போன்ற பல படங்களில் நடித்த நடிகை ஜெனிலியும் கிறிஸ்தவருமான ஜெனிலியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிகளுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ள நிலையில்... எப்போதும் காதல் ஜோடிகளை போல் வாழ்ந்து வருகிறார்கள். பலர் பார்த்து பொறாமை கொள்ளும் ஜோடியாகவும் இவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sanjay Dutt
சஞ்சய் தத் - மான்யதா.
பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக உள்ளார். இவர் ரிச்சா சர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ரிச்சா சர்மா உடல்நலக் குறைவால் உயிரிழந்த பின்னர் மான்யதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சஞ்சய் தத். மான்யதா ஜோடிக்கு இரட்டை பிள்ளைகள் இருக்கிறார்கள். மான்யாதா மற்றும் ரிச்சா ஷர்மா இருவருமே இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனாக்ஷி சின்ஹா - ஜாகீர் இக்பால்:
நேற்று காதலித்து திருமணம் செய்து கொண்ட, சோனாக்ஷி சின்ஹா இந்து மதத்தை சேர்ந்தவர். கடந்த 7 வருடமாக ஜாகீர் இக்பால் என்கிற நடிகரை காதலித்து வந்த இவரின் காதலுக்கு ஆரம்பத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.