Devayani: 2 ஹீரோயின்ஸ் ரெடி! அம்மாவை மிஞ்சிய அழகில் தேவயானியின் மகள்கள்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
ஹீரோயின் போல் இருக்கும் நடிகை தேவயானியின் இரண்டு மகள்களுடைய தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மும்பையை சேர்ந்த நடிகை தேவயானி, முதல் முதலில் அறிமுகமானது பெங்காலி மொழி படங்கள் மூலம் தான். இதை தொடர்ந்து மலையாள மொழி படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படியே ஹிந்தியில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், இவர் நடித்த ஹிந்தி திரைப்படம் எதிர்பாத்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
பின்னர் தமிழில் கடந்த 1995-ம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் வெளிவந்த தொட்டாச்சினுங்கி படத்தில் நாகேந்தர பிரசாத்துக்கு ஜோடியாக நடித்தார். தன்னுடைய அறிமுக படத்திலேயே கவர்ச்சியை வாரி இறைத்த தேவயானி... பின்னர் சுதாரித்து கொண்டு தன்னுடைய முகவெட்டுக்கு ஏற்றாப்போல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
குறிப்பாக 1996-ம் ஆண்டு, அஜித்துக்கு ஜோடியாக இவர் நடித்த 'காதல் கோட்டை' திரைப்படம் தேவையானிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழக அரசின் ஸ்டேட் ஃபிலிம் விருதும் இவருக்கு கிடைத்தது. மேலும் இவரின் நடிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிய தொடங்கியது. இப்படத்தின் வெற்றி தேவயானி வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களில் நிலை நிறுத்தியது.
பின்னர் தமிழ் சினிமாவில் படு பிஸியான ஹீரோயினாக மாறிய தேவயானி... அஜித், விஜய், கமல், மாமூட்டி,சரத்குமார், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
30 வயதை கடந்த பின்னரும், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தேவயானி, தன்னை வைத்து நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜகுமாரனை காதலித்த நிலையில், இதற்க்கு தேவயானியின் ஒட்டு மொத்த குடும்பமும் எதிராக இருந்தது. எனவே காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறி ராஜகுமாரனையே திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் காதலுக்கு அடையாளமாக, இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இனியாவுக்கு தற்போது 18 வயதாகும் நிலையில், பிரியங்காவும் 16 வயதும் ஆகிறது. ஆனால் தற்போது இனியாவை ஹீரோயின் ஆக்கும் நோக்கத்தில், தேவயானி - ராஜகுமாரன் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தன்னுடைய மகளை விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வைப்பேன் என ராஜகுமாரன் கூறியுள்ள நிலையில், தேவயானி மூத்த மகளை வெளியிடங்களுக்கு அழைத்து வர துவங்கியுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது.
Devayani
அதே போல் தன்னுடைய அக்கா தேவயானி பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி நகுல் வெளியிட்ட புகைப்படத்தில் பிரியங்கா - இனியா என இருவருமே அம்மாவை மிஞ்சும் அழகில் உள்ளனர் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.