- Home
- Gallery
- Ajithkumar: அஜித்தின் அரசியல் ஆர்வம் பற்றி அவரிடமே கேட்ட ரமேஷ் கண்ணா! ஒற்றை வார்த்தையில் கூறிய நச் பதில்!
Ajithkumar: அஜித்தின் அரசியல் ஆர்வம் பற்றி அவரிடமே கேட்ட ரமேஷ் கண்ணா! ஒற்றை வார்த்தையில் கூறிய நச் பதில்!
தளபதி அரசியலுக்கு வந்துட்டாரு... நீங்க எப்போ அரசியலுக்கு வருவீங்க என, அஜித்திடம் ரமேஷ் கண்ணா கேள்வி எழுப்பிய போது, அவர் கூறிய பதிலை தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Ajith
கோலிவுட் திரையுலகில் அதிகபட்ச ரசிகர்களை வைத்துள்ள விஜய் - அஜித் இருவரும் நிஜத்தில் நண்பர்கள் என்றாலும், இவர்களின் ரசிகர்கள் மட்டும் எப்போதுமே, போட்டி உணர்வுடன் ,முட்டி மோதி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் அஜித் - விஜய் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆனாலோ, அல்லது விசேஷ நாட்களில் வெளியானாலோ இவர்களின் அலப்பறை எல்லை மீறும் அளவுக்கு இருக்கும்.
thala ajith
ஆனால் தளபதி விஜய், TVK என்கிற புதிய கட்சியை துவங்கி தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளார். தற்போது நடித்து வரும் Goat படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், நடிக்க உள்ள தளபதி 69 படம் தான் விஜய்யின் கடைசி படம் என்பதை அவரே அறிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அஜித் ரசிகர்களுக்கும் கொஞ்சம் கவலையான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
Ajith
காரணம் விஜய் - அஜித் போட்டி என்பது பல வருடங்களாக இருந்து வருகிறது. இவருக்கும் இடையே நிலவும் போட்டி தான் இவர்களை அடுத்தடுத்து தரமான கதைகளையும், வித்தியாசமான கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடிக்க உந்துதலாக இருந்தது. இந்த போட்டியில் இருந்து விஜய் விலகினால்... ஒரு வலுவான போட்டி தகர்கப்படுவதால், அஜித்தும் நடிப்பில் ஆர்வம் இல்லாமல் பைக்கை எடுத்து கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விடுவாரோ என்பது தான் அஜித் ரசிகர்களின் கவலை.
இது ஒரு புறம் இருக்க, அஜித்துடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளவரும்... AK-வின் நண்பருமான ரமேஷ் கண்ணா, அஜித்திடம் ஒரு நாள் பேசும் போது... 'விஜய் அரசியலுக்கு வந்துட்டாரு... நீங்க எப்போ வருவீங்க என கேஷுவலாக கேட்க, அதற்க்கு அஜித்து ஒரே வார்த்தையில் 'மூடிட்டு போ' என கூறி அசிங்கப்படுத்தி விட்டாராம். இந்த தகவலை பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் "அந்த அளவுக்கு தான் அஜித்துக்கு அரசியல் மீது ஆர்வம் உள்ளது. அவரை பொறுத்தவரை அரசியல் என்றால் ஒரு குடிமகனாக தவறாமல் வாக்களித்து தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்பது தான் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.