- Home
- Gallery
- அல்லு அர்ஜுனுக்கு கணவருடன் சென்று திருமண அழைப்பு விடுத்த வரலட்சுமி! கிஃப்ட் கொடுத்து அசத்திய ஐகான் ஸ்டார்!
அல்லு அர்ஜுனுக்கு கணவருடன் சென்று திருமண அழைப்பு விடுத்த வரலட்சுமி! கிஃப்ட் கொடுத்து அசத்திய ஐகான் ஸ்டார்!
திருமணத்திற்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்... வரலட்சுமி தற்போது தன்னுடைய திருமணத்திற்காக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அழைப்பு விடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஹீரோயின் முதல் வில்லி வரை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் வரலட்சுமி சரத்குமாருக்கு வருகிற ஜூலை 2ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
மும்பையை சேர்ந்த, ஆர்ட் கேலரி நிறுவனத்தின் உரிமையாளரான நிகோலாய் சச்தேவ் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார். கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணமும் நடைபெற உள்ளது.
சரத்குமார் தன்னுடைய மகளின் திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி வரு - நிக்கோலாய் திருமணம் தாய்லாந்திலும், ஹல்தி மற்றும் திருமண வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நயன்தாரா, சித்தார்த், சுதீப், என ஏராளமான பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த வரு தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரின் தந்தை அல்லு அரவிந்த் ஆகியோரை தன்னுடைய வருங்கால கணவருடன் சென்று சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுன் நடிகை வரலட்சுமிக்கு அழகிய பட்டு புடவை ஒன்றையும் பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.