இந்த நாட்டில் இந்தியாவின் ஒரு ரூபாய் 500 ரூபாய்க்கு சமம்.. எந்த நாடு தெரியுமா..?
இந்தியாவின் ஒரு ரூபாய் கொடுத்தால் 500 ரூபாயை அள்ளிக் கொடுக்கும் ஒரு நாடு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?
உலகப் பொருளாதார சந்தையில் ஒவ்வொரு நாட்டின் பணத்திற்கும் ஒவ்வொரு மதிப்பு இருக்கிறது. அதாவது, அமெரிக்காவின் ஒரு டாலர் இந்திய மதிப்பில் 83 ரூபாய் ஆகும். அந்த வரிசையில், இந்தியாவின் ஒரு ரூபாய் கொடுத்தால் 500 ரூபாயை அள்ளிக் கொடுக்கும் ஒரு நாடு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? அது வேற எந்த நாடும் இல்லைங்க 'ஈரான்' தான்.
ஈரான் நாட்டின் நாணய மதிப்பு:
ஈரான் எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் மிகப் பெரிய நாடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை இந்த நாட்டின் மீது விதித்துள்ளது. இதுதான் இந்த நாட்டின் நாணய மதிப்பு மிகவும் மோசமாக இருப்பதற்கு காரணம். இதனால்தான், ஈரானில் இந்தியாவின் ஒரு ரூபாய் அந்த நாட்டின் 500 ரூபாய்க்கு சமம்.
இதையும் படிங்க: உலகில் இன்று வரை மழையே பெய்யாத கிராமம் பற்றி தெரியுமா..?
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடை:
ஈரான் பொருளாதாரத்தில் வலுவாக இருந்தாலும், உலக வல்லரசு நாடுகள் கொடுக்கும் கடும் நெருக்கடியால் அந்த நாட்டின் நாணய மதிப்பு மிகவும் பெரும் பாதாளத்தில் சென்றுள்ளது. அதுமட்டுமின்றி, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள இந்த தடையால், பல நாடுகள் அமெரிக்காவுக்கு பயந்து ஈரானிடம் கச்சா எண்ணையை வாங்குவதில்லை. இதனால் தான் சர்வதேச சந்தையில் ஈரானின் பொருளாதாரம் சரியத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: தென்கிழக்கு ஆசியாவின் முதல் நாடு.. ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரிக்க தயார்! எந்த நாடு தெரியுமா?
ஈரான் இந்தியா உறவு:
ஈரானின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தாலும் கூட, பழங்காலத்தில் இருந்தே ஈரானுடன் இந்தியா நல்ல உறவை கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய மதிப்பின்படி 10 ஆயிரம் ரூபாயுடன் ஒருவர் ஈரானுக்கு சுற்றுலா சென்று, அங்கு சொகுசாக தாங்கவும் செய்யலாம், வசதியாக பயணிக்கவும் செய்யலாம்.
அமெரிக்க டாலர்:
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ஈரானுடன் அவர்களின் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுடன் தொடரும் பகையால், இந்த நாட்டில் அமெரிக்க டாலர் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. முக்கியமாக, அமெரிக்க டாலரை இந்த நாட்டில் வைத்திருப்பது மிகப்பெரிய குற்றம். இதனால்தான் என்னவோ, இந்த நாட்டில் அமெரிக்க டாலர்களை கடத்தும் தொழில் அதிகளவில் உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D