உலகில் இன்று வரை மழையே பெய்யாத கிராமம் பற்றி தெரியுமா..?
நாம் வாழும் இந்த பூமியில் இருக்கும் ஒரு கிராமத்தில் இன்றுவரை மழை பெய்யவில்லை. அது எந்த கிராமமும் தெரியுமா..?
நாம் வாழும் இந்த உலகில் பல மர்மங்கள் நிறைந்துள்ளன. சில சமயங்களில் விஞ்ஞானிகள் கூட அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். நீங்கள் வாழும் பகுதியில் மழைக்காலங்களில் மழை பொழிவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஏன் பலமுறை வெள்ளம் போன்ற கடினமான சூழ்நிலை கூட நீங்கள் சந்தித்து இருக்கலாம்.
ஆனால், மழை பெய்யாத இடத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா..? நிச்சயமாக இதைக் கேட்பதற்கு உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஆம், நாம் வாழும் இந்த பூமியில் இருக்கும் ஒரு கிராமத்தில் இன்றுவரை மழை பெய்யவில்லை. ஆனால், அங்கு இருக்கும் மனிதர்களும், விலங்குகளும் அங்கு நிம்மதியாக வாழ்கின்றனர்.
உண்மையில், நாம் பேசும் அந்த கிராமத்தின் பெயர் அல்-ஹுதைப். இந்த கிராமத்தில் ஏன் இன்று வரை மழை பெய்யவில்லை? அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என இதுபோன்ற பல கேள்விக்கான விடைகளை இங்கே பார்க்கலாம்.
இதையும் படிங்க: தென்கிழக்கு ஆசியாவின் முதல் நாடு.. ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரிக்க தயார்! எந்த நாடு தெரியுமா?
அல்-ஹுதைப் கிராமம்:
இந்த கிராமம் ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் தான் உள்ளது. இந்த கிராமமானது தரை மட்டத்திலிருந்து சுமார் 3200 கிலோமீட்டர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த கிராமம் எப்போதும் வறண்டு தான் இருக்கும். சொல்லப் போனால் இது ஒரு மலை கிராமம். முக்கியமாக இங்கு கோடையில் மிகவும் சூடாகவும், அதேசமயம் குளிர் காலத்தில் மிகவும் குளிராகவும் இருக்கும். முக்கியமாக, குளிர்காலத்தில் இங்கு மக்கள் சூடான ஆடைகளின்றி வெளியே வருவதில்லை.
இதையும் படிங்க: துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்ய எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? ஷாக் ஆயிடுவீங்க!
சுற்றுலா பயணிகள் தினமும் இங்கு வந்து சுற்றியுள்ள சூழலை முழுமையாக அனுபவிக்கும் வகையில் இந்த கிராமம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. அப்போ ஏன் இங்கு மழை பெய்யவில்லை? என்று கேள்வி உங்கள் மனதில் எழலாம். உண்மையில், இங்கு மழை இல்லாததற்கு காரணம் இந்த கிராமம் அதிக உயரத்தில் இருப்பது தான். ஆம், இந்த கிராமம் 3200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதே சமயம் 2000 மீட்டர் உயரத்தில் தான் மேகங்களே உருவாகின்றன. அதாவது, இந்த கிராமத்துக்கு கீழ் தான் மேகங்கள் உருவாகின்றன. அதனால் இந்த கிராமத்தில் மழை பெய்யவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D