சோனாக்‌ஷி திருமண விழாவில் கலந்து கொண்ட அதிதி - சித்தார்த் ஜோடி ரேகாவை சந்தித்து வாழ்த்து பெற்றதுடன், அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளும், நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா தனது நீண்டநாள் காதலரான ஜாகீர் இக்பாலை நேற்று திருமணம் செய்து கொண்டார். மும்பையில் நேற்று நடந்த இந்த விழாவில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு சோனாக்‌ஷி - ஜாகீர் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 23-ம் தேதி இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில் அதே ஜூன் 23 ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக சோனாக்‌ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தங்களின் இரு குடும்பங்களின் ஆசீர்வாதம், இரு கடவுள்களின் ஆசீர்வாதத்துடன் நாங்கள் இப்போது கணவன் மனைவியாக மாறி உள்ளோம் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்..

Sonakshi Sinha: சிவப்பு நிற பட்டு புடவையில்... வெட்க புன்னகையோடு கணவருடன் போஸ் கொடுத்த சோனாக்ஷி சின்ஹா!

சோனாக்‌ஷி திருமண விழாவில், விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி ஜோடியும் கலந்து கொண்டனர். அதே போல் பழம்பெரும் பாலிவுட் நடிகையுமான ரேகாவும் இதில் கலந்து கொண்டார். அப்போது அதிதி - சித்தார்த் ஜோடி ரேகாவை சந்தித்து வாழ்த்து பெற்றதுடன், அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

View post on Instagram

இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதில் சித்தார்த் ரேகாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதையும் பின்னர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. பின்னர் ரேகா, சித்தார்த் - அதிதி மூவரும் கேராவுக்கு அழகாக போஸ் கொடுக்கின்றனர். அதே போல் மற்றொரு வீடியோவில் அதிதியும் ரேகாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை காண முடிகிறது.

View post on Instagram

இதனிடையே அதிதி மற்றும் சித் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு வெளியான மகா சமுத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சித்தார்த் - அதிதி இடையே காதல் மலர்ந்த நிலையில், இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். கடந்த மார்ச் மாதம், இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இதுதொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு தங்கள் நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டனர். சித்தார்த் - அதிதி ஜோடி ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில், சித்தார்த்த அதனை மறுத்தார். 

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல்... சோனாக்ஷி சின்ஹா வரை மதம் கடந்து திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!

இதுகுறித்து பேசிய அவர் “ நாங்கள் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்ததாக என்று பலர் என்னிடம் சொன்னார்கள். குடும்பத்துடன் தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்வதற்கும், ரகசியமாகச் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.