விடாமுயற்சி எப்போ ரிலீஸ்? படம் என்ன நிலையில் இருக்கு? தல Fansக்கு ஸ்வீட் நியூஸ் கொடுத்த நடிகர் - என்ன அது?
Thala Ajith : தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி பட குறித்த சிறப்பான அப்டேட் ஒன்றை, அப்படத்தில் நடித்து வரும் மூத்த நடிகர் அறிவித்துள்ளார்.
Thunivu
தல அஜித் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "துணிவு" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த பட பணிகளை அதே 2023ம் ஆண்டு இறுதியில் துவங்கினார் தல அஜித்.
Magizh Thirumeni
பிரபல நடிகரும், இயக்குனருமான மகிழ் திருமேனி இயக்கத்தில், "விடாமுயற்சி" என்கின்ற தலைப்பில் அப்படம் உருவாக துவங்கியது. இந்த படம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் இந்த படம் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.
Arjun
இந்த நிலையில் பிரபல நடிகர் அர்ஜுன் அவர்கள் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் ஒரு சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அடுத்த வாரம் அசர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளதாக கூறியுள்ளார்.
Vidaamuyarchi release
இன்னும் 20 முதல் 30 சதவீத படபிடிப்பு பணிகள் இருப்பதாகவும், தீபாவளிக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் இருக்காது என்றும் அவர் கூறியிருக்கிறார். இது தல ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாறியுள்ளது.