GOAT : "வயிற்றில் கருவுடன் சினேகா.. குடைபிடிக்கும் தளபதி" வெளியானது சின்ன சின்ன கண்கள் சிங்கிள் பாடல்!

GOAT Second Single : தளபதி விஜயின் GOAT படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடலான "சின்ன சின்ன கண்கள்" பாடல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் அதை வெளியிட்டுள்ளார்.

Share this Video

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் தான் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகின்றார், இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகில் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இசையில், இந்த திரைப்படம் உருவாகும் நிலையில், ஏற்கனவே "விசில் போடு" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது GOAT திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடலாக "சின்ன சின்ன கண்கள்" என்கின்ற பாடல் வெளியாகி உள்ளது. 

தளபதி விஜய் அவர்கள் அந்த பாடலை வெளியிட்டுள்ளார், இன்று தளபதி விஜய் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கோட் திரைப்படத்திலிருந்து ஒரு சிறப்பான வீடியோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Video