அதிவேகமாக வந்த கார்.. தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த பெண்கள் மீது மோதியது-தூக்கி வீசப்பட்டதில் 3 பேர் பலி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சாலையில் உள்ள முக்காணியில் சாலையோரத்தில் குடிநீர்க்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெண்கள் மீது மோதிய கார்
பெங்களூரில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று காலை அதிவேகமாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியில் சென்றது. அப்போது சாலையோரத்தில் உள்ள தெருக்குழாயில் பெண்கள் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர். அதிவேகமாக வந்த கார் 4 பெண்கள் மீது மோதி தூக்கி வீசியது. இதில், முக்காணியை சேர்ந்த நட்டார் சாந்தி, பார்வதி, அமராவதி மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சண்முகத்தாய் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 பெண்கள் துடிதுடித்து பலி
விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த ஏரல் பெருங்குளத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் மணிகண்டனை கைது செய்து ஆத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. வார விடுமுறை காரணமாக ஏராளமான வாகனங்கள் விரைந்து செல்வதால் விபத்து ஏற்படுவதாகவும், எனவே வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மரநாய் வேட்டை..! நண்பர்களுக்கு விருந்து.? - ஆட்டோ சங்க தலைவரை தட்டித்தூக்கிய வனத்துறை