- Home
- Gallery
- Trisha : "த்ரிஷா என் கல்யாணத்தை நிறுத்த பார்த்தார்?.. பிரபல தமிழ் நடிகர் முன்வைத்த புகார் - ஏன்? என்ன நடந்தது?
Trisha : "த்ரிஷா என் கல்யாணத்தை நிறுத்த பார்த்தார்?.. பிரபல தமிழ் நடிகர் முன்வைத்த புகார் - ஏன்? என்ன நடந்தது?
Actress Trisha : தென்னிந்திய சினிமாவின் ராணி என்ற பட்டதோடு கடந்த 25 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் பயணித்து வரும் சூப்பர் ஹிட் நடிகை தான் த்ரிஷா.

trisha krishnan
தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான டாப் ஸ்டார் பிரசாந்தின் ஜோடி திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகை தான் திரிஷா. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படம் தான் "மௌனம் பேசியதே". தமிழ் திரை உலகில் "மனசெல்லாம்", "சாமி", "லேசா லேசா", "அலை"மற்றும் "எனக்கு 20 உனக்கு 18" என்று இவர் அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் பல நல்ல திரைப்படங்களில் நடித்து ஹாலிவுட் உலகின் முன்னணி நாயகியாக திரிஷா மாறினார்.
trisha photo gallery
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் உலகின் குயின் என்கின்ற பட்டத்தோடு இவர் பயணித்தும் வருகிறார். குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளர் நடிகை திரிஷா என்றே கூறலாம். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் த்ரிஷா, 40 வயதை கடந்தும் இன்றளவும் சிங்கிளாக வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் அவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை முன் வைத்திருக்கிறார்.
actress trisha
"மனசெல்லாம்" திரைப்படம் த்ரிஷாவிற்கு கோலிவுட் உலகில் அமைந்த ஒரு நல்ல திரைப்படமாகும். இந்நிலையில் அந்த திரைப்படத்தில் அவரோடு இணைந்து நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் தான் த்ரிஷா மீது ஒரு பரபரப்பு புகாரை முன் வைத்தார். ஸ்ரீகாந்த்திற்கு கடந்த 2007ம் ஆண்டு வந்தனாவோடு திருமணம் நடந்து முடிந்தது. த்ரிஷாவும், வந்தனாவுக்கு திருமணத்திற்கு முன்பே பேசி பழகியவர்கள்.
Srikanth
அப்படி இருக்க, ஒரு நாள் வந்தனாவிடம், நீ ஸ்ரீகாந்தை திருமணம் செய்துகொள்ள வேண்டாம், காரணம் அவர் நல்லவர் அல்ல, அவருக்கு ஆங்கிலம் கூட சரியாக பேசத் தெரியாது என்றெல்லாம் கூறியுள்ளார் த்ரிஷா. இதை கண்டு அதிர்ந்த வந்தனா, ஸ்ரீகாந்த்திடம் அதை கூறிவிட்டு பின் த்ரிஷாவிடமும் ஏன் அப்படி பேசினீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு த்ரிஷா.. நீ எனக்கு இருக்கு நல்ல நண்பனை திருமணம் செய்ய பார்க்கிறாய் அல்லவே அதனால் அப்படி சொன்னேன் கூற, அதன் பிறகு தான் த்ரிஷா அவரை பிராங்க் செய்தது தெரியவந்துள்ளது. இது போல சுட்டி சேட்டைகளை செய்வதிலும் த்ரிஷா பலே கில்லாடியாம்.