தங்க நிற உடையில்... கண்ணை கட்டும் கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்! அதிரி புதிரி போட்டோஸ்!
நடிகை ஜான்வி கபூர் தங்க நிற கவர்ச்சி உடையில், வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
பாலிவுட் திரையுலகில், படு பிஸியான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், தற்போது தங்க நிற உடையில், ரசிகர்களை கவரும் விதத்தில் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, தடாக் படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜான்வி கபூர். காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்... தன்னுடைய அம்மா இறந்ததால் இரண்டு ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் ஜான்வி கபூர்.
இதைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரீஸ், குஞ்சன் சக்சேனா போன்ற படங்களில் ஜான்வி கபூர் நடித்தார். இந்த படங்கள் இவருடைய நடிப்பை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. குறிப்பாக குஞ்சன் சக்சேனா திரைப்படம் ஜான்வி கபூர் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சமீப காலமாக ஜான்வி கபூர் பிற மொழிகளில் ஹிட்டான படங்களின், ஹிந்தி ரிமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான 'கோலமாவு கோகிலா' திரைப்படம் ஹிந்தியில் 'குட்லக் ஜெர்ரி' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி, ஜான்வி கபூருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
அதேபோல் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஹெலன்' படத்தின், ஹிந்தி ரீமேக்கிலும் ஜான்வி கபூர் நடித்தார் இப்படம் 'மிலி' என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிப்பில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தி வருகிறாரோ, அதே போல் போட்டோஷூட் எடுத்து கொள்வதிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், தற்போது தங்க நிற உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.