- Home
- Career
- 8th Pay Commission: கடைசி சம்பளத்தில் 67% பென்ஷன்! LPD குறித்து அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை!
8th Pay Commission: கடைசி சம்பளத்தில் 67% பென்ஷன்! LPD குறித்து அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை!
8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் வலுவான கோரிக்கைகளை வைத்துள்ளன. குறைந்தபட்ச பென்ஷன் மற்றும் வயது அடிப்படையிலான உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
110

Image Credit : gemini
ஊழியர்கள் சொன்ன கருத்துக்கள் இதுதான்.!
ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை மத்திய ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. அந்த வகையில், 8வது மத்திய ஊதியக் குழு (8th CPC) தற்போது ஆலோசனை கட்டத்தில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியர் அமைப்புகள் மற்றும் பிற தரப்பினருடன் இந்தக் குழு கூட்டங்களை நடத்தி, அவர்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
210
Image Credit : Asianet News
நேர்மையாக ஆராயும் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
இந்தக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இருக்கிறார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் ஜெயின் உறுப்பினர்-செயலாளராகவும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர், பேராசிரியர் புலாக் கோஷ் உறுப்பினராகவும் உள்ளனர். இந்த மூவர் தலைமையில்தான் அனைத்து பணிகளும் நடக்கின்றன.
310
Image Credit : Asianet News
18 மாதங்களுக்குள் பரிந்துரைகளை வழங்க உத்தரவு
இந்தக் குழு தனது அதிகாரப்பூர்வ பரிந்துரைகளை 2027 மே மாதத்திற்குள் சமர்ப்பிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழு நவம்பர் 3, 2025-ல் அமைக்கப்பட்டது. விதிகளின்படி, 18 மாதங்களுக்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும். எனவே, பிப்ரவரி அல்லது ஏப்ரல் 2027-ல் முதல் அறிவிப்பு வரலாம். ஆனாலும், அறிக்கை சமர்ப்பிக்க இறுதி காலக்கெடு மே 2027 ஆகும்.
410
Image Credit : X
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
இந்தக் குழுவின் முடிவுகள், நாட்டில் உள்ள சுமார் 1 கோடி மக்களை நேரடியாகப் பாதிக்கும். இதில் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் அடங்குவர். ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை ஊழியர்களும், ஓய்வு பெற்றவர்களும் இதில் அடக்கம்.
510
Image Credit : Asianet News
விரிவான பரிந்துரைகளைச் சமர்ப்பித்த ஊதியக் குழு
பல்வேறு ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள், ஊதியக் குழுவிடம் விரிவான பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளன. இதில் தேசிய கவுன்சில் (NC-JCM), மகாராஷ்டிரா பழைய ஓய்வூதிய அமைப்பு, மற்றும் அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் (AIDEF) ஆகியவை முக்கியமானவை. ஓய்வூதிய கட்டமைப்பை மாற்றி அமைப்பதே இவர்களின் முக்கிய கோரிக்கை.
610
Image Credit : Asianet News
குறைந்தபட்சம் 67% பென்ஷன்
குறைந்தபட்ச பென்ஷனை உயர்த்துவதற்காக ஓய்வூதியர் சங்கங்கள் இரண்டு முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. முதலாவதாக, கடைசியாக வாங்கிய சம்பளத்தில் (Last Pay Drawn - LPD) குறைந்தபட்சம் 67% பென்ஷன் வழங்க வேண்டும். இரண்டாவதாக, பணியின் கடைசி 10 மாத சராசரி சம்பளத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச பென்ஷனை நிர்ணயிக்க வேண்டும்.
710
Image Credit : gemini
100% வரை பென்ஷன் வழங்கப்படலாம்
வயதான ஓய்வூதியதாரர்களுக்கு வயது அடிப்படையில் படிப்படியாக பென்ஷனை உயர்த்தும் திட்டமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 90 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு, அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் (LPD) 100% வரை பென்ஷன் வழங்கப்படலாம். ஆனால், இந்த பரிந்துரை இன்னும் பரிசீலனையில் உள்ளது; மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.
810
Image Credit : ai photo
90 வயதுக்கு மேல் 100% பென்ஷன்
பரிந்துரையின்படி, வயது அடிப்படையிலான பென்ஷன் கட்டமைப்பு இப்படி இருக்கலாம்: 65 வயதில் கடைசி சம்பளத்தில் 70%, 70 வயதில் 75%, 75 வயதில் 80%, 80 வயதில் 85%, 85 வயதில் 90%, மற்றும் 90 வயதுக்கு மேல் 100% பென்ஷன்.
910
Image Credit : ChatGPT
பென்ஷனை மாற்றியமைக்கக் கோரி அதிகாரப்பூர்வமாக மனு
ஜனவரி 1, 2026-க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பென்ஷனும் மாற்றியமைக்கப்படுமா என்பது குறித்து ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகளில் (ToR) தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இந்த அச்சம் காரணமாக, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர் நலச் சங்கம் (REWA) ஆகியவை டிசம்பர் 31, 2025-க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் பென்ஷனை மாற்றியமைக்கக் கோரி அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளன.
1010
Image Credit : Getty
இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை
8வது ஊதியக் குழுவின் ஆலோசனைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன, இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குழுவின் பரிந்துரைகள் வந்தாலும், அதைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. எனவே, இறுதிப் பரிந்துரை தற்போதைய முன்மொழிவுகளிலிருந்து எவ்வளவு மாறுபடும் என்பதை இப்போது சொல்வது கடினம்.
Latest Videos

