- Home
- Astrology
- Parigha Yoga: பரிக யோகம் + சிவ யோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம்! அடிச்சுது ஜாக்பாட்!
Parigha Yoga: பரிக யோகம் + சிவ யோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம்! அடிச்சுது ஜாக்பாட்!
ஜோதிடத்தில் சிவயோகத்தால் பல நல்ல யோகங்கள் உருவாகின்றன. இது சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகளைத் தரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இதனால் சூப்பரான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று இங்கே பார்க்கலாம்.

பரிக யோகம் + சிவயோகத்தின் நன்மைகள்
ஜோதிடப்படி, செப்டம்பர் 8, செவ்வாய்க்கிழமை ஒரு முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. இன்று தொடங்கும் அதிர்ஷ்டம் அடுத்த 10 நாட்களுக்கு அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும். அன்று, பரிக யோகம் மற்றும் சிவ யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்கள் உருவாகின்றன. இதனால், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரக்கூடும். மேலும், சுப கிரகமான சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இந்த மாற்றங்கள் பல ராசிகளின் தொழில், வருமானம், குடும்பம், பயணம் மற்றும் சமூக அந்தஸ்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 8 ஒரு முக்கியமான நாளாக இருக்கலாம். இந்த நாளில் பிறக்கும் அதிர்ஷ்டம் அடுத்த 10 நாட்களுக்கு கேட்டதையும் கேட்காததையும் கொடுக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதே சமயம், வருமானத்தில் எந்தக் குறையும் இருக்காது, அதனால் நிதி நிலைமையை நீங்கள் பேலன்ஸ் செய்ய முடியும். ஆனாலும், உங்கள் உடன் பிறந்தவர்களின் உடல்நிலையில் கூடுதல் கவனம் வைப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் சில குறைகள் அவர்களின் மனநிலையைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவது மிக அவசியம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பல்வேறு துறைகளில் நல்ல வாய்ப்புகள் வரலாம். அவர்களக்குசெப்டம்பர் 8 ஒரு பொன்னான நாளாக இருக்கலாம். இந்த நாளில் பிறக்கும் அதிர்ஷ்டம் அடுத்த 10 நாட்களுக்கு ராஜயோகத்தை தரும். குறிப்பாக, நீண்ட தூரப் பயணம் அல்லது திடீர் பயணத் திட்டங்கள் அமைய வாய்ப்புள்ளது. சுப நிகழ்ச்சிகள் அல்லது ஆன்மீக காரியங்களுக்காக நீங்கள் பணம் செலவு செய்யும் சூழல் வரலாம். ஆன்மீகம் மற்றும் தெய்வீக விஷயங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் பேச்சுத் திறனும் தனிப்பட்ட கவர்ச்சியும் கூடும். இதனால், புதிய நபர்களுடன் நல்ல உறவுகளை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சாதகமான கிரக நிலைகளால் நல்ல லாபம் அடைவார்கள். அவர்களுக்கு செப்டம்பர் 8 ஒரு செமத்தியான நாளாக இருக்கலாம். இந்த நாளில் பிறக்கும் அதிர்ஷ்டம் அடுத்த 10 நாட்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். நீங்கள் தொடங்கிய வேலைகளை எந்தத் தடையும் இல்லாமல் செய்து முடிக்க முடியும். முக்கியமான முயற்சிகளில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தப் பயணம் தனிப்பட்ட முறையிலோ அல்லது தொழில் ரீதியாகவோ உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். வருமானத்தை அதிகரிக்கப் புதிய வழிகள் உருவாகும். சேமிப்பும் மேம்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் இனிமையும் செல்வாக்கும் கூடுவதால், புதிய நட்புகளும் தொழில் தொடர்புகளும் உருவாகலாம். வியாபாரம் மற்றும் தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு இன்று சூழல் சாதகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 8 ஒரு அதிர்ஷட நாளாக இருக்கலாம். இந்த நாளில் பிறக்கும் அதிர்ஷ்டம் அடுத்த 10 நாட்களுக்கு அள்ளிக்கொடுக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும் சூழல் இருக்கலாம். அதே சமயம், வாகனம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குச் செலவு செய்யவும் வாய்ப்புள்ளது. கலை, மீடியா, ஃபேஷன் மற்றும் டிசைனிங் போன்ற கிரியேட்டிவ் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் வரலாம். உங்கள் முயற்சிகளில் நீங்கள் விரும்பிய வெற்றியை அடைய அதிக வாய்ப்புள்ளது. வேலை மாற்றத்தைப் பற்றி யோசிப்பவர்களுக்குப் புதிய வாய்ப்பு கிடைக்கலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்பானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அமையலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 8 ஒரு முக்கியமான நாளாக இருக்கலாம். இந்த நாளில் பிறக்கும் அதிர்ஷ்டம் அடுத்த 10 நாட்களுக்கு அள்ளிக்கொடுக்கும். வேலையில் உங்கள் செயல்திறன் அங்கீகரிக்கப்பட்டு, உங்களுக்குப் பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம். நிதி நிலைமை மேம்படும் சூழல் இருக்கும். திருமண வாழ்வில் நீண்ட நாட்களாக இருந்த சில தடைகள் படிப்படியாகக் குறையலாம். உங்கள் துணை, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். ஆன்மீக மற்றும் மத விஷயங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று தொடங்கும் வேலைகளில் பொறுமையாகச் செயல்பட்டால், படிப்படியாக வெற்றி பெறலாம்.

