டபுள் சந்தோஷத்தில் கமல் மகள்... ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறி ஸ்ருதிஹாசன் நடத்திய வேறலெவல் போட்டோஷூட் வைரல்
நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், ஸ்டைலிஷ் உடையில் நடத்திய வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், பாடகியாக சினிமாவில் அறிமுகமானவர். சிறுவயதில் இருந்தே தேவர்மகன், ஹே ராம் போன்ற படங்களில் இவர் பாடி இருக்கிறார்.
கடந்த 2009-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஸ்ருதி, அதன்பின் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.
அந்த வகையில் தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் ஏழாம் அறிவு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதி.
இதையடுத்து விஜய்யுடன் புலி, அஜித்துக்கு ஜோடியாக வேதாளம், சூர்யா உடன் சிங்கள் 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கு மொழியில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த பொங்கல் பண்டிகைக்கு தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின.
இந்த இரண்டும் படங்களிலுமே ஹீரோயினாக நடித்தது ஸ்ருதிஹாசன் தான். இரு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் தற்போது டபுள் சந்தோஷத்தில் உள்ளார் ஸ்ருதி.
தற்போது கே.ஜி.எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் ஸ்ருதி. அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன.
சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வரும் இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், இந்த உடையில் ஸ்ருதிஹாசன் ஸ்டைலிஷ் தமிழச்சி போல் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.