ஏழு நாட்கள்... 80 அடி மரத்தில் நிர்வாணமாக தொங்க விட்ட இயக்குனர் பாலா! மனம் திறந்த நடிகர் ஜிஎம் குமார்!
இயக்குனர் பாலா இயக்கத்தில் 'அவன் இவன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகரும், இயக்குனருமான, ஜி எம் குமார் பாலா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் பாலா. முன்னணி நடிகர்களுக்கு எப்படி தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ... அதே போல் சில இயக்குனர் படங்களுக்கு மட்டுமே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் தனித்துவமான கதைக்களத்துடன் நேர்த்தியான நடிப்பை நடிகர்களிடம் இருந்து வாங்கி, படமாக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் பாலா.
இவர் படபிடிப்பு இல்லாத நேரத்தில் மிகவும் ஜாலியான மனிதராக இருந்தாலும், படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பானவர் என இவரைப் பற்றி இவருடன் பணியாற்றிய பல நடிகர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல் இவர் இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, என ஒவ்வொரு படமும் வெவ்வேறான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டவை. படத்தில் கதை மட்டும் இன்றி அதில் இருக்கும் நடிகர்களும் அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்கள் என்று கூறினால் அது மிகையல்ல.
விக்ரம் மகன் துருவை வைத்து பாலா இயக்க அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான 'வர்மா' பாலா திரையுலக வாழ்க்கையில் ஒரு கரும் புள்ளியாக அமைந்தது. இவர் இயக்கி முடித்த படத்தை நிராகரித்த தயாரிப்பு நிறுவனம், வேறு ஒருவரை வைத்து இந்த படத்தை இயக்கி முடித்து.
இந்த படத்தின் சர்ச்சைக்கு பின்னர், நடிகர் சூர்யாவை வைத்து, வணங்கான் படத்தை இயக்கினார். ஆனால் திடீர் என , இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த படத்தை பாதியிலேயே நிறுத்தும் வரை சென்றுவிட்டது. எனவே வேறு ஒரு நடிகரை வரித்து இயக்குனர் பாலா 'வணங்கான்' படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை 'வணங்கான்' படத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து எவ்வித தகவல் வெளியாகாத நிலையில், பிரபல நடிகரும், இயக்குனருமான ஜி எம் குமார் இயக்குனர் பாலா குறித்து கூறியுள்ள தகவல்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஆரியா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் - இவன். இதில் ஜமீனாக நடித்திருந்தவர் ஜி எம் குமார். இவரது கதாபாத்திரம் இப்படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், ஜி எம் குமாரை வில்லன் நிர்வாணமாக ஓடவிட்டு அடித்து, மரத்தில் தொங்கவிட்ட காட்சிகள் பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்தது.
இந்த காட்சி குறித்து தற்போது பேசியுள்ள ஜி எம் குமார் மொத்தம் 14 நாட்கள் நிர்வாணமா, இந்த காட்சியில் நடித்ததாகவும் அதில் 7 நாட்கள் உண்மையிலேயே இயக்குனர் பாலா தன்னை நிர்வாணமாக 80 அடி மரத்தில் தொங்க விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல் இயக்குனர் பாலா படப்பிடிப்பில் மிகவும் கண்டிப்பானவராக இருந்தாலும், உண்மையில் அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்றும், அதேபோல் அவர் ஒரு குழந்தை போன்றவர் என இயக்குனர் பாலா குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Breaking: பிரபல நடிகரின் படப்பிடிப்பில் திடீர் விபத்து! லைட் மேன் உயிரிழந்ததால் பரபரப்பு!