Varisu Vs Thunivu: அட கடவுளே... முக்கிய இடங்களில் நஷ்டத்தை சந்தித்த விஜய்யின் வாரிசு! அப்செட்டில் படக்குழு!
தளபதி விஜயின் 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், முக்கிய இடங்களில் இப்படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜயின் 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், முக்கிய இடங்களில் இப்படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு படங்களுமே, ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும், மற்றொரு தரப்பினர் மத்தியில் சில கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
எனினும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து இரண்டு படங்களுமே போட்டி போட்டுக் கொண்டு வசூல் சாதனை செய்து வரும் நிலையில், தளபதியின் 'வாரிசு' திரைப்படம் முக்கிய இடங்களில் துணிவு படத்தை விட குறைவான வசூல் செய்து, நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல், பட குழுவினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
வாரிசு திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்தனர்.
இதை தொடர்ந்து, 'வாரிசு' முக்கிய இடங்களில் சரிவை சந்தித்துள்ளதாக வெளியான தகவல் பட குழுவினரை சற்று அதிருப்தி அடைய செய்துள்ளது. அமெரிக்காவில் 1.6 மில்லியன் வசூல் செய்யும் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற படங்களாக கருதப்படுகின்றன. ஆனால் படம் வெளியாகி ஏழு நாட்கள் ஆகியும் இதுவரை 1.1 மில்லியன் மட்டுமே வசூலித்துள்ளதால் வாரிசு படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல், கல்ஃப், மலேசியா, சிங்கப்பூர், போன்ற இடங்களிலும் வாரிசு திரைப்படம் துணிவை விட குறைவாகவே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Breaking: பிரபல நடிகரின் படப்பிடிப்பில் திடீர் விபத்து! லைட் மேன் உயிரிழந்ததால் பரபரப்பு!