அப்பா ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்று மகன்களுடன் பொங்கல் கொண்டாடிய ஐஸ்வர்யா! ஹாப்பி மொமெண்ட்ஸ் போட்டோஸ்
ரஜினிகாந்தின் மூத்த மகளான , இந்த வருட பொங்கலை கொண்டாடியபோது எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தன்னுடைய காதல் கணவர் தனுஷ் உடன் சுமார் 18 வருடங்கள் சந்தோசமாக வாழ்ந்த நிலையில், திடீரென கடந்தாண்டு விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
இவர்கள் இருவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காக விவாகரத்து முடிவில் இருந்து பின்வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஐஸ்வர்யா விவாகரத்தில் மிகவும் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியானது.
அவ்வப்போது தங்களுடைய பிள்ளைகளுக்காக மட்டுமே இருவரும் பள்ளி விழா, மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், மற்றபடி இருவருமே தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
விவாகரத்து முடிவுக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ள ஐஸ்வர்யா, நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரை வைத்து கிரிக்கெட் சம்பந்தமான லால் சலாம் என்கிற படத்தை இயக்க உள்ளார்.
Breaking: பிரபல நடிகரின் படப்பிடிப்பில் திடீர் விபத்து! லைட் மேன் உயிரிழந்ததால் பரபரப்பு!
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகளுக்காக, இந்த படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வருட பொங்கல் தன்னுடைய அப்பா ரஜினிகாந்த் மற்றும் அம்மா லதா ரஜினிகாந்த் ஆசிர்வாதத்துடன், மகன்கள் யாத்ரா மற்றும் லிங்க ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தங்களுடைய குடும்ப வழக்கப்படி பல வகையான பலகாரங்கள் வைத்தும், மாட்டுக்கு பொங்கல் படைத்தும் ஐஸ்வர்யா இந்த பொங்கலை சிறப்பித்துள்ளார்.