MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி 67 அப்டேட்...! பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தட்டித்தூக்கிய பிரபலம்

தளபதி 67 அப்டேட்...! பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தட்டித்தூக்கிய பிரபலம்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆன போட்டியாளர் ஒருவர், விஜய்யுடன் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளாராம்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 18 2023, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஜய் நடித்துள்ள வாரிசு படம் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. மாஸ்டர் படத்துக்கு பின் விஜய்யும், லோகேஷும் இணைந்து பணியாற்றும் படம் இது என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பு உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

தளபதி 67 படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் மற்றும் மிஷ்கின் இடையேயான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் டான் ஆக நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அப்படம் குறித்த மேலும் ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்...ஆவலோடு காத்திருந்த அமுதவாணன்.. அலேக்காக பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறிய கதிரவன்- பிக்பாஸில் செம டுவிஸ்ட்

34

அதன்படி தளபதி 67 படத்தில் நடிக்க பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் தேர்வாகி உள்ளாராம். தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஜனனி. இலங்கையை சேர்ந்தவரான இவர், கடந்த சில வாரங்களுக்கு முன் எலிமினேட் ஆகிவிட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தான் அவருக்கு இப்படி ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

44

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பது வழக்கம் தான். ஆனால் வெளியேறிய உடன் விஜய் போன்ற முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பை ஜனனி கைப்பற்றி உள்ளது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இருப்பினும் அவர் என்ன கேரக்டரில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்...ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் புஷ்பா பட நடிகர்… ரசிகர்கள் உற்சாகம்!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved