சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாரிசு படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அது தற்போது ‘வாரிசு’ எக்ஸ்பிரஸ் ரெயில் என அழைக்கும் அளவுக்கு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. 

விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சி உள்ளதால், அப்படத்திற்கான ரிலீஸ் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் 24-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது ஒருபுறம் இருக்க மறுபுறம், தமிழகம் முழுவதும் வாரிசு படத்தின் புரமோஷன் வேலைகளும் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மெட்ரோ ரெயில்களில் வாரிசு படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அது சென்னை முழுக்க வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

இதையும் படியுங்கள்... ஆடம்பரம்.. அலப்பறை இன்றி... சீரியல் நடிகை அனுவுக்கு சிம்பிளாக வளைகாப்பு நடத்திய கணவர் - வைரலாகும் போட்டோஸ்

தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாரிசு படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அது தற்போது ‘வாரிசு’ எக்ஸ்பிரஸ் ரெயில் என அழைக்கும் அளவுக்கு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இதுகுறித்த வீடியோவை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Scroll to load tweet…

வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்கி உள்ளார். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் குஷ்பு, சரத்குமார், பிரபு, ஷியாம், சங்கீதா, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க கமிட் ஆன நயன்தாரா - அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?