MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • Mandaadi Box Office : வசூல் மன்னனாக மாறிய சூரி... பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி படைத்த அடிபொலி சாதனை

Mandaadi Box Office : வசூல் மன்னனாக மாறிய சூரி... பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி படைத்த அடிபொலி சாதனை

Mandaadi Movie Day 6 Box Office : சூரி ஹீரோவாக நடித்த மண்டாடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது. அப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 16 2026, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mandaadi Sets a New Box Office Record
Image Credit : X

Mandaadi Sets a New Box Office Record

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து வெளியான படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்த அவர், காமெடி நடிகர் என்ற தனது முந்தைய பிம்பத்தை படிப்படியாக மாற்றினார்.

Mandaadi vs Sardar 2 : சரசரவென சரிந்த சர்தார் 2 வசூல்... மளமளவென உயர்ந்த மண்டாடி கலெக்‌ஷன் - 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மாஸ் காட்டும் மண்டாடி
Image Credit : X

மாஸ் காட்டும் மண்டாடி

சீரியஸான கதாபாத்திரங்களிலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்த சூரிக்கு, ‘மாமன்’ திரைப்படம் கமர்ஷியல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மதிமாறன் இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்கு இடையே நடைபெறும் பரபரப்பான படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

Related Articles

Related image1
Sardar 2 vs Mandaadi : பாக்ஸ் ஆபிஸில் சர்தார் 2-க்கு சம்மட்டி அடி கொடுத்த மண்டாடி... வசூலில் கிங் ஆக மாறிய சூரி!
Related image2
Mandaadi vs Sardar 2 : சரசரவென சரிந்த சர்தார் 2 வசூல்... மளமளவென உயர்ந்த மண்டாடி கலெக்‌ஷன் - 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
35
குவியும் பாசிடிவ் ரெஸ்பான்ஸ்
Image Credit : X/@rsinfotainment

குவியும் பாசிடிவ் ரெஸ்பான்ஸ்

இப்படத்தில் சூரியுடன் மகிமா, சுகாஸ், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான திரைக்கதை, பின்னணி இசை மற்றும் கடல் சார்ந்த காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ள ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன. குறிப்பாக படகு போட்டி தொடர்பான காட்சிகள் ரசிகர்களுக்கு பரபரப்பான திரை அனுபவத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. கடந்த 10ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான ‘மண்டாடி’, முதல் நாளில் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்றாலும், அடுத்தடுத்த நாட்களில் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களால் வசூல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

45
மண்டாடி பாக்ஸ் ஆபிஸ்
Image Credit : X/@rsinfotainment

மண்டாடி பாக்ஸ் ஆபிஸ்

படம் வெளியான 5 நாட்களில் ரூ.65 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், அப்படத்தின் 6ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் 6ம் நாளான நேற்று ரூ.4.40 கோடி வசூலித்திருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் ரூ.58.78 கோடியும், உலகளவில் ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ.69.43 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரியின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் மண்டாடி படைத்துள்ளது. இதற்கு முன்னர் ரூ.64 கோடி வசூல் உடன் விடுதலை படம் இருந்த நிலையில், அதனை மண்டாடி ஓவர்டேக் செய்துள்ளது.

55
100 கோடி வசூலிக்குமா?
Image Credit : X/@rsinfotainment

100 கோடி வசூலிக்குமா?

மேலும், திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் படம் அமைந்துள்ளதால், வரும் வார இறுதியில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வசூல் வேகம் தொடர்ந்தால், ‘மண்டாடி’ ரூ.100 கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு சூரி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அப்படி ரூ.100 கோடி வசூலை கடந்தால், சூரியின் திரைப்பயணத்தில் அந்த வசூல் சாதனையை பதிவு செய்யும் முதல் திரைப்படமாக ‘மண்டாடி’ அமையக்கூடும்.

Mandaadi Review : சூரியின் மண்டாடி சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூரி (நடிகர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Recommended image2
Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?
Recommended image3
Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
Related Stories
Recommended image1
Sardar 2 vs Mandaadi : பாக்ஸ் ஆபிஸில் சர்தார் 2-க்கு சம்மட்டி அடி கொடுத்த மண்டாடி... வசூலில் கிங் ஆக மாறிய சூரி!
Recommended image2
Mandaadi vs Sardar 2 : சரசரவென சரிந்த சர்தார் 2 வசூல்... மளமளவென உயர்ந்த மண்டாடி கலெக்‌ஷன் - 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved