MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sardar 2 vs Mandaadi : பாக்ஸ் ஆபிஸில் சர்தார் 2-க்கு சம்மட்டி அடி கொடுத்த மண்டாடி... வசூலில் கிங் ஆக மாறிய சூரி!

Sardar 2 vs Mandaadi : பாக்ஸ் ஆபிஸில் சர்தார் 2-க்கு சம்மட்டி அடி கொடுத்த மண்டாடி... வசூலில் கிங் ஆக மாறிய சூரி!

Sardar 2 vs Mandaadi Box Office : சூரி நடித்த மண்டாடி படமும், கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 12 2026, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சர்தார் 2 vs மண்டாடி வசூல்
Image Credit : X

சர்தார் 2 vs மண்டாடி வசூல்

தமிழ் சினிமாவில் கடந்த 10-ம் தேதி இரண்டு முக்கியமான படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 மற்றும் சூரி கதாநாயகனாக நடித்துள்ள மண்டாடி ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. தற்போது இரு படங்களின் ஆரம்பகட்ட வசூல் நிலவரம் வெளியாகியுள்ள நிலையில், அதில் சூரியின் படம் முன்னிலை பெற்றுள்ளது.

இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பி.எஸ்.மித்ரன், அதன் பின்னர் கார்த்தியை வைத்து உருவாக்கிய சர்தார் திரைப்படத்தின் மூலம் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். ஸ்பை ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவான சர்தார் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது.

Sardar 2 Review : கார்த்தி vs எஸ்.ஜே.சூர்யா... சர்தார் 2 மிஷன் வெற்றியா? தோல்வியா? விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கலவையான விமர்சனங்களை பெறும் சர்தார் 2
Image Credit : X/@Prince_Pictures

கலவையான விமர்சனங்களை பெறும் சர்தார் 2

சர்தார் 2 படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.

குறிப்பாக, அதிக ரன்னிங் டைம் படத்திற்கு பின்னடைவாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் பாதி விறுவிறுப்பாக இருந்ததாக கூறும் பலர், இரண்டாம் பாதியில் திரைக்கதை தடுமாறியதாகவும் விமர்சித்துள்ளனர். இதன் தாக்கம் படத்தின் வசூலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
Mandaadi Review : சூரியின் மண்டாடி சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
Related image2
Sardar 2 Review : சர்தார் 2 படம் மிரட்டலா? சொதப்பலா? விமர்சனம் இதோ
34
பாசிட்டிவ் விமர்சனங்களை குவிக்கும் மண்டாடி
Image Credit : X/@rsinfotainment

பாசிட்டிவ் விமர்சனங்களை குவிக்கும் மண்டாடி

மறுபுறம், வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள மண்டாடி திரைப்படமும் இதே நாளில் திரைக்கு வந்தது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரும்பாலும் பாசிட்டிவான கருத்துகளே கிடைத்து வருகின்றன. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள படகுப் போட்டி காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்காத வகையில் புதுமையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில், தேவையற்ற பிளாஷ்பேக் காட்சிகள் இருப்பதாகவும், படம் முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் இல்லாததால் சில இடங்களில் மெதுவாக நகர்வதாகவும் ஒரு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.

Mandaadi Review : சூரியின் மண்டாடி சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ

44
2 நாட்களில் யார் முன்னிலை?
Image Credit : X/@rsinfotainment

2 நாட்களில் யார் முன்னிலை?

இரு படங்களும் வெளியாகி இரண்டு நாட்களைக் கடந்துள்ள நிலையில், உலகளாவிய வசூலில் மண்டாடி முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கிடைத்துள்ள வசூல் தகவலின்படி, சர்தார் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.10.65 கோடி வசூல் செய்துள்ளதாகவும், மண்டாடி ரூ.15.85 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கார்த்தியின் சர்தார் 2 படத்தை விட சூரியின் மண்டாடி சுமார் ரூ.5.20 கோடி அதிகமாக வசூல் செய்துள்ளது. சர்தார் 2 படத்திற்கு கிடைத்து வரும் கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் அதன் வசூல் வேகத்தை பாதித்திருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து விடுதலை, விடுதலை 2, கருடன், மாமன் உள்ளிட்ட படங்களில் கவனம் ஈர்த்த சூரிக்கு, மண்டாடியும் வெற்றிப் படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சர்தார் 2 திரைப்படம்
சூரி (நடிகர்)
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Solomon Pappaiya : ஒரே ஒரு காமெடி சீனால் சினிமாவே வேண்டாம் என தூக்கியெறிந்த சாலமன் பாப்பையா - பலரும் அறிந்திடாத தகவல்
Recommended image2
DC பட வெற்றி; மூவருக்கு BMW கார் பரிசளித்த கலாநிதி மாறன்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?
Recommended image3
Diwali Movies : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க... அடுத்தடுத்து தீபாவளி ரேஸில் குதித்த 4 பிரம்மாண்ட படங்கள்...!
Related Stories
Recommended image1
Mandaadi Review : சூரியின் மண்டாடி சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Sardar 2 Review : சர்தார் 2 படம் மிரட்டலா? சொதப்பலா? விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved