MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • Sardar 2 Review : கார்த்தி vs எஸ்.ஜே.சூர்யா... சர்தார் 2 மிஷன் வெற்றியா? தோல்வியா? விமர்சனம் இதோ

Sardar 2 Review : கார்த்தி vs எஸ்.ஜே.சூர்யா... சர்தார் 2 மிஷன் வெற்றியா? தோல்வியா? விமர்சனம் இதோ

Sardar 2 Movie Review : பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி இருக்கும் சர்தார் 2 திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Sep 10 2026, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sardar 2 Movie Review
Image Credit : YouTube

Sardar 2 Movie Review

2022-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள படம் ‘சர்தார் 2’. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சர்தார் 2 கதை என்ன?
Image Credit : Sony Music South

சர்தார் 2 கதை என்ன?

படத்தின் தொடக்கத்தில் உளவு அமைப்பு ‘வால்ரஸ்’ என்ற மர்ம ஏஜென்ட்டை தேடுகிறது. அவரை கார்த்தி தேடிச் செல்லும் அதே நேரத்தில், எஸ்.ஜே. சூர்யாவின் ஆட்களும் அவரை பின்தொடர்கின்றனர். ஒரு கட்டத்தில் வால்ரஸ் உயிரிழக்க, இறப்பதற்கு முன்பாக ஒரு கத்தி வடிவிலான சாவியை கார்த்தியிடம் ஒப்படைக்கிறார். அந்த சாவியின் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க கார்த்தி களமிறங்குகிறார். அப்போது இதுபோன்று மேலும் இரண்டு சாவிகள் இருப்பதும், மூன்று சாவிகளும் இணைந்தால் மிகப்பெரிய பயோ அபோகலிப்ஸுக்கு வழிவகுக்கும் ஆபத்தான ஒன்றை திறக்க முடியும் என்பதும் தெரிய வருகிறது. மனித குலத்தின் பெரும் பகுதியை அழிக்க வேண்டும் என்பதே எஸ்.ஜே. சூர்யாவின் திட்டம். ஆனால் இந்தக் கதை இன்றைக்கு தொடங்கியதல்ல; இதன் வேர்கள் 1981-ம் ஆண்டிலேயே இருப்பதை கார்த்தி கண்டுபிடிக்கிறார்.

1981-ல் ஏற்பட்ட மிகப்பெரிய உயிரியல் பேரழிவை தடுத்து நாட்டை காப்பாற்றியவர் சர்தார் என்பது மகனான விஜய பிரகாஷுக்கு தெரிய வருகிறது. ஆனால் அந்த சம்பவத்தில் ஒரு கிராமமே கடுமையாக பாதிக்கப்படுகிறது. சுமார் 3,000 பேர் வசித்த அந்த கிராமத்தில் வெறும் 54 பேரை மட்டுமே சர்தாரால் மாற்று மருந்தின் உதவியுடன் காப்பாற்ற முடிகிறது. அனைவரையும் காப்பாற்றுவேன் என்று கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு சர்தாரை பல ஆண்டுகளாக துரத்துகிறது. அப்படியிருக்க, பல ஆண்டுகளுக்கு முன்பு தடுக்கப்பட்ட அந்த பேரழிவை மீண்டும் எதற்காக நிகழ்த்த எஸ்.ஜே. சூர்யா முயற்சிக்கிறார்? அவருடைய நோக்கம் என்ன? சர்தார் மீண்டும் அந்த ஆபத்தை தடுக்கிறாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

Related Articles

Related image1
Sardar 2 : ஆக்‌ஷனில் மிரட்டும் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி... வைரலாகும் சர்தார் 2 டிரெய்லர்
Related image2
Sardar 2 Review : சர்தார் 2 படம் மிரட்டலா? சொதப்பலா? விமர்சனம் இதோ
35
சர்தார் 2 எப்படி இருக்கு?
Image Credit : our own

சர்தார் 2 எப்படி இருக்கு?

முதல் பாகத்தில் தண்ணீர் தொடர்பான பிரச்சனையை மையமாக வைத்து சமூகத்துக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை முன்வைத்திருந்தார் இயக்குநர் பி.எஸ். மித்ரன். இந்தப் பாகத்தில் ‘கொலிஸ்டின்’ என்ற ஆன்டிபயாடிக்கின் தவறான பயன்பாடு எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய பேரழிவு குறித்து கவனம் செலுத்தியிருக்கிறார். அதை வெறும் சீரியஸான கருத்தாக மட்டும் சொல்லாமல், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, நிழல்கள் ரவி ஆகியோரின் காட்சிகள் மூலம் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையுடனும் கொண்டு சென்றிருப்பது படத்தின் முக்கியமான பலம். சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும் வகையில் இந்தப் பகுதி அமைந்துள்ளது.

45
சர்தார் 2 ரிவ்யூ
Image Credit : X

சர்தார் 2 ரிவ்யூ

கார்த்தி சர்தார் மற்றும் விஜய பிரகாஷ் என இரண்டு கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சர்தாரின் பிளாஷ்பேக் காட்சிகள், ஆக்‌ஷன் பகுதிகள் மற்றும் இடைவேளை என்ட்ரி ஆகியவை ரசிகர்களை கவரும் வகையில் இருக்கின்றன.

எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் மீண்டும் தனது தனித்துவமான நடிப்பை காட்டியுள்ளார். அவர் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரத்தின் வில்லத்தனம் அழுத்தமாக வெளிப்படுகிறது. குறிப்பாக யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவியுடன் அவர் வரும் காட்சிகள் திரையரங்கில் கைதட்டல்களை பெறும் வகையில் அமைந்துள்ளன.

மாளவிகா மோகனன் ஏஜென்ட் கதாபாத்திரத்தை நன்றாக கையாண்டுள்ளார். நாசர், அவினாஷ், ஆஷிகா ரங்கநாத், பாபு ஆண்டனி, நிழல்கள் ரவி, யோகி பாபு உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

55
படத்தின் பிளஸ் & மைனஸ்
Image Credit : X

படத்தின் பிளஸ் & மைனஸ்

படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் குறிப்பிடத்தக்க பலமாக உள்ளன. ஒளிப்பதிவு மற்றும் VFX உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் படத்தின் பிரம்மாண்டத்தை அதிகரிக்கின்றன. சாம் சி.எஸ்.-ன் பின்னணி இசையும் பல முக்கிய காட்சிகளுக்கு தேவையான வேகத்தையும் தாக்கத்தையும் கொடுக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் மற்றும் மாஸ் தருணங்களில் பிஜிஎம் நன்றாக ஒர்க் ஆகிறது.

கார்த்தி – எஸ்.ஜே. சூர்யா நடிப்பு; வலுவான கதாபாத்திர வடிவமைப்பு; கொலிஸ்டின் குறித்த சமூக அக்கறையுள்ள களம்; ஆக்‌ஷன் காட்சிகள்; ஒளிப்பதிவு மற்றும் டெக்னிக்கல் ஒர்க்; துணை நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு ஆகியவை படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளன.

படத்தின் நீளம் சற்று அதிகம், அதை குறைத்திருக்கலாம். அதேபோல் எமோஷனல் கனெக்ட் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் இவை தான் படத்திற்கு மைனஸாக அமைந்துள்ளன.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சர்தார் 2 திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mandaadi Review : சூரியின் மண்டாடி சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Sardar 2 Review : சர்தார் 2 படம் மிரட்டலா? சொதப்பலா? விமர்சனம் இதோ
Recommended image3
Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
Related Stories
Recommended image1
Sardar 2 : ஆக்‌ஷனில் மிரட்டும் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி... வைரலாகும் சர்தார் 2 டிரெய்லர்
Recommended image2
Sardar 2 Review : சர்தார் 2 படம் மிரட்டலா? சொதப்பலா? விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved