MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Mandaadi vs Sardar 2 : சரசரவென சரிந்த சர்தார் 2 வசூல்... மளமளவென உயர்ந்த மண்டாடி கலெக்‌ஷன் - 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Mandaadi vs Sardar 2 : சரசரவென சரிந்த சர்தார் 2 வசூல்... மளமளவென உயர்ந்த மண்டாடி கலெக்‌ஷன் - 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Mandaadi vs Sardar 2 Box Office : கார்த்தி நடித்த சர்தார் 2 படமும், சூரியின் மண்டாடி படமும் கடந்த வாரம் ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 15 2026, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mandaadi vs Sardar 2 Box Office
Image Credit : X

Mandaadi vs Sardar 2 Box Office

கார்த்தி சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் சூரி ஆரம்பத்தில் காமெடியனாக அறிமுகமாகி, பின்னர் விடுதலை படம் மூலம் ஹீரோவானார். அப்படத்திற்கு பின்னர் அவர் ஹீரோவாக நடித்த எல்லா படங்களுமே வெற்றியை ருசித்தன. இதனால் தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டார் சூரி. கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்தில் காமெடியனாக நடித்திருந்த சூரி, இன்று, அவருடைய படத்துக்கு போட்டியாக தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

Mandaadi Review : சூரியின் மண்டாடி சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கலவையான விமர்சனத்தை பெற்ற சர்தார் 2
Image Credit : X/@Prince_Pictures

கலவையான விமர்சனத்தை பெற்ற சர்தார் 2

கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் கடந்த செப்டம்பர் 10ந் தேதி ரிலீஸ் ஆனது. சர்தார் படத்தின் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இதனால் சர்தார் 2 படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி இதில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்ததால், சர்தார் 2 கன்ஃபார்ம் ஹிட் என்றெல்லாம் பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆன பின்னர் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. சர்தார் 2 கலவையான விமர்சனங்களை பெற்றது.

Related Articles

Related image1
Sardar 2 : ஆக்‌ஷனில் மிரட்டும் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி... வைரலாகும் சர்தார் 2 டிரெய்லர்
Related image2
Sardar 2 Review : சர்தார் 2 படம் மிரட்டலா? சொதப்பலா? விமர்சனம் இதோ
35
மண்டாடிக்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ்
Image Credit : X/@rsinfotainment

மண்டாடிக்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ்

மறுபுறம் இப்படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன மண்டாடி திரைப்படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றதோடு மட்டுமின்றி வசூலிலும் தூள் கிளப்பி வருகிறது. இப்படத்தை மதிமாறன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சூரி உடன் சத்யராஜ், மஹிமா நம்பியார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த மண்டாடி திரைப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இப்படம் ரிலீஸ் ஆன நான்கே நாட்களில் ரூ.50 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், மண்டாடி படத்தின் ஐந்தாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

45
மண்டாடி வசூல்
Image Credit : X

மண்டாடி வசூல்

நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால், மண்டாடி திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.11.25 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. அதேபோல் ஓவர்சீஸில் ரூ.1.25 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் இப்படம் ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.62.38 கோடி வசூலித்திருக்கிறது. இதன்மூலம் சூரியின் கெரியரில் மிகப்பெரிய வசூல் அள்ளிய படமாக மண்டாடி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் வெற்றியால் படக்குழுவினர் செம உற்சாகத்தில் உள்ளனர்.

55
சர்தார் 2 வசூல்
Image Credit : Asianet News

சர்தார் 2 வசூல்

அதேபோல் மண்டாடிக்கு போட்டியாக ரிலீஸ் ஆன சர்தார் 2 திரைப்படம் வசூலில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று இந்தியாவில் வெறும் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ரூ.15.35 கோடி வசூல் செய்துள்ள இப்படம் உலகளவில் ரூ.19.85 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. இதே நிலை நீடித்தால் இப்படம் தோல்வியை சந்திக்க நேரிடும். முன்னதாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கார்த்தி நடித்த வா வாத்தியார் திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.

Sardar 2 Review : கார்த்தி vs எஸ்.ஜே.சூர்யா... சர்தார் 2 மிஷன் வெற்றியா? தோல்வியா? விமர்சனம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சர்தார் 2 திரைப்படம்
சூரி (நடிகர்)
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
OTT Releases : மொத ராத்திரி முதல் ராம் அண்ட் லீலா வரை... இந்த வாரம் ஓடிடியில் டஜன் கணக்கான படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ்
Recommended image2
Samantha Baby Shower: வைரலாகும் சமந்தாவின் வளைகாப்பு போட்டோஸ்... 'பாரம்பரியத்தில் ஒரு சக்தி இருக்கு' என நெகிழ்ச்சி!
Recommended image3
Bigg Boss Wild Card entry: பிக்பாஸ் வீட்டில் புதிய புயல்..ஆனந்தியின் அதிரடி என்ட்ரி
Related Stories
Recommended image1
Sardar 2 : ஆக்‌ஷனில் மிரட்டும் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி... வைரலாகும் சர்தார் 2 டிரெய்லர்
Recommended image2
Sardar 2 Review : சர்தார் 2 படம் மிரட்டலா? சொதப்பலா? விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved