MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • Vaali : யுவன் கொடுத்த சவாலான டியூன்... இது எனக்கு ஜுஜுபி மாதிரினு சொல்லி வாலி கொடுத்த சூப்பர் ஹிட் பாட்டு..!

Vaali : யுவன் கொடுத்த சவாலான டியூன்... இது எனக்கு ஜுஜுபி மாதிரினு சொல்லி வாலி கொடுத்த சூப்பர் ஹிட் பாட்டு..!

Vaali Song Secret : யுவன் சங்கர் ராஜா கொடுத்த கஷ்டமான டியூனுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள் அடிபொலி ஹிட் அடித்த கதையை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 16 2026, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vaali Song Secret
Image Credit : X

Vaali Song Secret

தமிழ் சினிமாவில் இசை பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்து, தனக்கென ஒரு தனி இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் மகனான இவர், தனது குடும்பத்தின் இசைப் பயணத்தைத் தொடர்ந்து வந்தாலும், தனது தனித்துவமான இசை பாணியால் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த ‘அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான யுவன், அதன் பிறகு ஏராளமான வெற்றிப் பாடல்களையும், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். குறிப்பாக 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ்களின் இசை ரசனையில் யுவனின் பாடல்கள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.

Vaali : வாலிக்கு கவிஞர் கண்ணதாசன் விஸ்கியை கிஃப்டாக கொடுக்க தூண்டிய பாடல் பற்றி தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
யுவன் - வெங்கட் பிரபு கூட்டணி
Image Credit : our own

யுவன் - வெங்கட் பிரபு கூட்டணி

இயக்குனர் வெங்கட் பிரபுவுடனான யுவன் சங்கர் ராஜாவின் கூட்டணி தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான காம்போக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ‘சென்னை 28’ தொடங்கி வெங்கட் பிரபுவின் பல படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார். இந்த கூட்டணியில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

அந்த வரிசையில் 2011-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் யுவன் இசையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தின் பாடல்களான ‘வாடா பின்லேடா’, ‘மச்சி ஓபன் தி பாட்டில்’ உள்ளிட்டவை இன்றளவும் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பெற்று வருகின்றன.

Related Articles

Related image1
Yuvan shankar Raja : ‘கருப்பு திராவிடன்’ என மாஸ் காட்டிய யுவன் சங்கர் ராஜா... வைரல் பதிவால் தெறிக்கும் இன்ஸ்டா
Related image2
Vaali : ஒரே வரிகளை 2 வெவ்வேறு பட பாடல்களில் பயன்படுத்திய வாலி! ரெண்டு பாட்டுமே சூப்பர் ஹிட்!
34
வாலிக்கு யுவன் வைத்த பரிட்சை
Image Credit : our own

வாலிக்கு யுவன் வைத்த பரிட்சை

அதேபோல், யுவன் சங்கர் ராஜா மற்றும் மது ஸ்ரீ குரல்களில் உருவான ‘என் நண்பனே என்னை ஏய்த்தாய்’ பாடலுக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இந்த பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி. இந்த பாடலின் மெட்டு உருவான விதத்திலும் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. பாடலின் டியூன் மிகவும் வேகமாகவும், சிக்கலான முறையிலும் அமைந்திருந்ததால், அதற்கு ஏற்ப வாலி எப்படி வரிகளை எழுதப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்ததாம். ஆனால் அந்த சவாலை மிகவும் எளிதாக கையாண்ட வாலி, மெட்டின் வேகத்துக்கு இணையாக அழகான வார்த்தைகளை கோர்த்து அசத்தியிருக்கிறார்.

44
வரிகளால் மிரள வைத்த வாலி
Image Credit : Facebook

வரிகளால் மிரள வைத்த வாலி

“முதல் வரி முதல் முழுவதும் பிழை, விழிகளின் வழி விழுந்தது மழை, எல்லாம் உன்னால் தான்...” எனத் தொடங்கி, காதல் தோல்வியின் வலியை வெளிப்படுத்தும் வகையில் பாடல் வரிகளை அமைத்துள்ளார். மேலும், “இதுவா உந்தன் நியாயங்கள், எனக்கேன் இந்த காயங்கள்... கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்” என பாடலின் உணர்வை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கடினமான மெட்டுக்கேற்றவாறு இவ்வளவு இயல்பாகவும் கவித்துவமாகவும் வரிகளை அமைத்த வாலியின் திறமை, யுவன் சங்கர் ராஜாவையும் வெங்கட் பிரபுவையும் ஆச்சரியப்பட வைத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் ‘என் நண்பனே என்னை ஏய்த்தாய்’ பாடல் ஒரு இசை அனுபவமாக மட்டுமல்லாமல், வாலியின் கவித்திறனுக்கும் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

Vaali Song: பாடல் வரியை கேட்டு நடிக்க மறுத்த ஹீரோயின் - லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்த வாலி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்ப் பாடல்கள்
யுவன் சங்கர் ராஜா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் - அஜித் விலகியதால் அதிர்ஷ்ட காற்று: ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வசூல்? பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைப்பாரா சூர்யா!
Recommended image2
Mandaadi Box Office : வசூல் மன்னனாக மாறிய சூரி... பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி படைத்த அடிபொலி சாதனை
Recommended image3
Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Related Stories
Recommended image1
Yuvan shankar Raja : ‘கருப்பு திராவிடன்’ என மாஸ் காட்டிய யுவன் சங்கர் ராஜா... வைரல் பதிவால் தெறிக்கும் இன்ஸ்டா
Recommended image2
Vaali : ஒரே வரிகளை 2 வெவ்வேறு பட பாடல்களில் பயன்படுத்திய வாலி! ரெண்டு பாட்டுமே சூப்பர் ஹிட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved