Yuvan shankar Raja : ‘கருப்பு திராவிடன்... பெருமைமிகு தமிழன்’ என குறிப்பிட்டு யுவன் சங்கர் ராஜா பதிவிட்டு உள்ள பதிவு சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகி வருகிறது.
இசைஞானி இளையராஜா ‘மோடியும் அம்பேத்கரும் என்கிற புத்தகத்தில் முன்னுரை எழுதி இருந்தார். அதில் பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார் என பாராட்டி எழுதி இருந்தார் இளையராஜா. அவரின் இந்த நிலைப்பாட்டுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பு குரல்களும் எழுந்தன.
மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்டு பேசியதற்கு இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சிலர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதற்கெல்லாம் அசராத இளையராஜா, தனது கருத்தை திரும்பப்பெறப்போவதில்லை, மன்னிப்பும் கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற வேஷ்டி மற்றும் கருப்பு நிற டீசர்ட் அணிந்தபடி கடற்கரை ஓரத்தில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘கருப்பு திராவிடன்... பெருமைமிகு தமிழன்’ என பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகி வருகிறது.
இளையராஜா மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாலும், தனது நிலைப்பாடு என்ன என்பதை சூசகமாக தெரிவிக்கும் விதமாக யுவன் சங்கர் ராஜா இந்த பதிவை போட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... samantha : நான் அப்படி பண்ணியிருக்க கூடாது... அந்த வலி போக 6 மாசம் ஆச்சு - நடிகை சமந்தா
