samantha : நடிகை சமந்தா, இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய ஏராளமான கேள்விக்கு பதிலளித்தார். 

நடிகை சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளடு. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன் தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி உள்ளன. மூன்றுமே வேறலெவல் ஹிட் அடித்ததால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சமந்தாவின் முதல் சம்பளம்

நடிகை சமந்தா, இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய ஏராளமான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவரது முதல் சம்பளம் எவ்வளவு என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சமந்தா, தான் முதன்முதலில் வாங்கிய சம்பளம் 500 ரூபாய் என்றும், பள்ளியில் படிக்கும்போது செய்த ஒரு வேலைக்காக தனக்கு அந்த சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறினார்.

பச்சை குத்த வேண்டாம்

மற்றொரு ரசிகர் பச்சைகுத்திக் கொள்வது பற்றி கேட்டார். இதற்கு பதிலளித்த சமந்தா, தயவு செய்து எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் பச்சை குத்திக் கொள்ளாதீர்கள் என அறிவுரை வழங்கினார். ஏனெனில் அவர் தனது உடம்பில் சாய் என தனது முன்னாள் கணவரின் செல்லப் பெயரை பச்சை குத்தியுள்ளார். தற்போது அவரை பிரிந்துவிட்டதால் தான் இவ்வாறு அறிவுரை வழங்கி உள்ளார் சமந்தா.

6 மாத வலி

ரசிகர் ஒருவர் காது குத்திக் கொண்டபோது வலியை எப்படி பொறுத்துக் கொண்டீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சமந்தா, இந்த கேள்வியை கேட்டதற்கு நன்றி, எனக்கு அந்த வலி போக ஆறு மாதங்கள் ஆனது. அதை எப்படி பொருத்துக் கொண்டேன் என எனக்கே தெரியவில்லை. மிகவும் வலித்தது என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... vedaant madhavan :நடிகர் மாதவனின் ‘தங்க’மகன் வேதாந்த்! சர்வதேச நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

Scroll to load tweet…