vedaant madhavan : டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கெடுத்துள்ள வேதாந்த், ஆண்களுக்கான 800 மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் மாதவன். முதல் படத்திலேயே முத்திரைபதித்த இவர், அடுத்தடுத்து காதல் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம்வந்தார். இவரது நடிப்பு திறமையை பார்த்து பாலிவுட் இயக்குனர்களும் வாய்ப்பு வழங்கினர்.

இதனால் தற்போது இந்தியா முழுவதும் பேமஸ் ஆன நடிகராக திகழ்ந்து வருகிறார் மாதவன். இவர் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ராக்கெட்ரி என்கிற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

நடிகர் மாதவனுக்கு வேதாந்த் என்கிற மகன் உள்ளார். 16 வயதாகும் வேதாந்த் நீச்சல் போட்டிகளில் சிறந்து விளங்கி வருகிறார். தற்போது டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கெடுத்துள்ள வேதாந்த், ஆண்களுக்கான 800 மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னார் 1500 மீட்டர் போட்டியில் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.

இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் மாதவன், “உங்களின் ஆசி மற்றும் கடவுளின் அருளால் வேதாந்த்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது. இன்று நடைபெற்ற 800 மீட்டர் போட்டியில் வேதாந்த் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவனது பயிற்சியாளருக்கும் குழுவினருக்கு நன்றிகள்' என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப்பதிவுடன் தனது மகன் தங்கப் பதக்கம் வென்றபோது எடுத்த வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மாதவன்.

இதையும் படியுங்கள்... Meena : மீண்டும் கர்ப்பமானாரா நடிகை மீனா?... தீயாய் பரவும் வீடியோவால் ரசிகர்கள் குழப்பம்

View post on Instagram