Meena : மீண்டும் கர்ப்பமானாரா நடிகை மீனா?... தீயாய் பரவும் வீடியோவால் ரசிகர்கள் குழப்பம்
Meena : பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை மீனா, தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த நடிகை மீனா, கடந்த 1991-ம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசினிலே என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் கமல், ரஜினி, அஜித், பிரபு போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை மீனா. திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது மகள் நைனிகாவும் இவரைபோலவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கலக்கி உள்ளார். அவர் அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான தெறி படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.
நடிகை மீனா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டாரின் முறைப்பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார். அதேபோல் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக இவர் நடித்த புரோ டேடி திரைப்படம் அண்மையில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை மீனா, தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். அதில் அவர் கர்ப்பமான வயிற்றுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக கருதி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அவர் கர்ப்பமாக இல்லை. அது அவர் படத்துக்காக போட்ட கெட் அப் என பின்னர் தெரியவந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பீஸ்ட் படக்குழு செய்த மிஸ்டேக்... சுதாரித்துக் கொண்ட எச்.வினோத் - ஏ.கே 61 படக்குழுவுக்கு பறந்த அதிரடி உத்தரவு