MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பீஸ்ட் படக்குழு செய்த மிஸ்டேக்... சுதாரித்துக் கொண்ட எச்.வினோத் - ஏ.கே 61 படக்குழுவுக்கு பறந்த அதிரடி உத்தரவு

பீஸ்ட் படக்குழு செய்த மிஸ்டேக்... சுதாரித்துக் கொண்ட எச்.வினோத் - ஏ.கே 61 படக்குழுவுக்கு பறந்த அதிரடி உத்தரவு

AK 61 : ஏ.கே.61 திரைப்படம் பேங்க் கொள்ளையை மையமாக வைத்து தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து, வெள்ளை நிற தாடியுடன் புது கெட் அப்பிற்கு மாறி உள்ளார். 

1 Min read
Author : Ganesh A
Published : Apr 18 2022, 10:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த எச்.வினோத் கடைசியாக இயக்கிய படம் வலிமை. அஜித் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்தது.

24

வலிமை படத்தை தொடர்ந்து அஜித்துடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள எச்.வினோத், அவர் நடிக்கும் ஏ.கே.61 படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

34

ஏ.கே.61 திரைப்படம் பேங்க் கொள்ளையை மையமாக வைத்து தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து, வெள்ளை நிற தாடியுடன் புது கெட் அப்பிற்கு மாறி உள்ளார். இப்படத்திற்காக சென்னை மவுண்ட் ரோடு செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

44

இந்நிலையில், ஏ.கே.61 படப்பிடிப்பு தளத்திற்குள் யாரும் செல்போன் கொண்டுவரக் கூடாது என படக்குழுவினருக்கு இயக்குனர் எச்.வினோத் உத்தரவிட்டுள்ளாராம். விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கின் போது சில புகைப்படங்கள் லீக் ஆகின. அவ்வாறு ஏ.கே.61 படத்தின் புகைப்படங்கள் லீக் ஆகிவிடக் கூடாது என்ற காரணத்தால் இயக்குனர் எச்.வினோத் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

இதையும் படியுங்கள்... KGF 2 : ரஜினியை ஓரங்கட்டிய யாஷ்... 2.0 பட சாதனையை அசால்டாக தட்டித்தூக்கியது கே.ஜி.எஃப் 2

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
Recommended image2
சீண்டிய சிவி சண்முகம்... சைலண்டாக பதிலடி கொடுத்த நயன்தாரா - இன்ஸ்டா ஸ்டோரியை கவனிச்சீங்களா?
Recommended image3
யூத் முதல் சீதா பயணம் வரை... உகாதி ஸ்பெஷலாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved