KGF 2 : ரஜினியை ஓரங்கட்டிய யாஷ்... 2.0 பட சாதனையை அசால்டாக தட்டித்தூக்கியது கே.ஜி.எஃப் 2
KGF 2 : டோலிவுட்டில் தனது டப்பிங் படங்களின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சாதனையை கன்னட நடிகரான யாஷ் முறியடித்து உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு இந்தியா முழுவதும் மவுசு உண்டு. இதனால் இவர் நடிக்கும் படங்கள் இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுவதுண்டு. அவ்வாறு வெளியிடப்படும் படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்து வருகின்றன. குறிப்பாக தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் தமிழ் படங்களுக்கு செம்ம டிமாண்ட் இருந்து வருகிறது.
தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்படும் பிறமொழி படங்களில் தமிழ் படங்கள் தான் வசூலில் டாப்பில் உள்ளன. அதிலும் குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான 2.0 மற்றும் எந்திரன் ஆகிய படங்கள் தான் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளன. அதிலும் 2.0 திரைப்படம் தெலுங்கில் ரூ.50 கோடி வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
இந்நிலையில், அந்த சாதனையை யாஷ் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் முறியடித்துள்ளது. இப்படம் வெளியான 4 நாட்களில் தெலுங்கில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான பிறமொழி படங்களில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் கே.ஜி.எஃப் 2 முதலிடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்... Naga chaitanya : 2-வது திருமணத்துக்கு ரெடியாகும் நாக சைதன்யா... பொண்ணு யாரு தெரியுமா?