- Home
- Cinema
- விஜய் - அஜித் விலகியதால் அதிர்ஷ்ட காற்று: ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வசூல்? பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைப்பாரா சூர்யா!
விஜய் - அஜித் விலகியதால் அதிர்ஷ்ட காற்று: ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வசூல்? பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைப்பாரா சூர்யா!
விஜய் - அஜித் இருவருமே வேறு களத்தை தேர்ந்தெடுத்த நிலையில், 10 வருடங்களாக ஒரு ஹிட் படங்கள் கொடுக்க முடியாமல் தவித்த சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெளியான 2 படங்கள் ரூ.560 கோடி+ வசூலித்த நிலையில், தீபாவளிக்கு வரும் சீன் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

'கருப்பு' தந்த பிரம்மாண்ட வசூல் சாதனை!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத புதிய வசூல் மைல்கல்லை எட்டியது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடியைக் கடந்த முதல் சூர்யா திரைப்படம் என்ற சாதனையைப் படைத்த இப்படம், உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இதன் மூலம் சூர்யாவின் நட்சத்திர மதிப்பும் சந்தை நிலவரமும் மீண்டும் உச்சத்திற்குச் சென்றது.
தொடர் வெற்றி தந்த 'விஸ்வநாத் & சன்ஸ்'
'கருப்பு' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படமும் வணிக ரீதியாகப் பெரும் வெற்றி பெற்றது. இந்த 2 திரைப்படங்களும் இணைந்து உலகளவில் ரூ.560 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளன. ஒரே ஆண்டில் அடுத்தடுத்து வெளியான இரு படங்கள் இத்தகைய வசூலை ஈட்டியிருப்பது, புதிய வரலாற்றுச் சாதனைக்கான களத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.
தீபாவளிக்கு களமிறங்கும் ‘சீன்’
இந்தச் சூழலில், சூர்யாவின் 47-வது திரைப்படமாக உருவாகியுள்ள 'சீன்' மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படம் நவ.6-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளியான 2 படங்கள் மூலம் ரூ.560 கோடி கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக வெளியாகும் 'சீன்' திரைப்படம் சுமார் ரூ.460 கோடி வசூலித்தால், ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வசூலை எட்டிய முதல் தமிழ் நடிகர் என்ற புதிய சாதனையைச் சூர்யா படைப்பார் என்ற புள்ளிவிவரக் கணக்கு முன்வைக்கப்படுகிறது.
சீன் படத்திற்கு கேரளாவில் சாதகமான களம்
'சீன்' படத்தை ஜித்து மாதவன் இயக்குவதால் கேரளாவிலும் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜித்து மாதவனின் முந்தைய வெற்றிப் படங்களின் காரணமாகவும், சூர்யாவுக்கு ஏற்கனவே கேரளாவில் உள்ள வலுவான ரசிகர் பட்டாளத்தின் காரணமாகவும் கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளிலும் படத்திற்குச் சாதகமான சூழல் நிலவுகிறது.
சுமார் ரூ.460 கோடி என்பது ஒரு திரைப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் இலக்கு என்பதால், தீபாவளிப் போட்டிக் களம், திரையரங்குகளின் எண்ணிக்கை, படத்தின் விமர்சனம், மக்களின் வரவேற்பைப் பொறுத்தே இந்த மைல்கல் சாத்தியமாகும் என்கின்றனர் சினிமா விமர்சர்கள்.
விஜய்-அஜித் தங்களது துறைகளை மாற்றி அதில் கவனம் செலுத்தி வரும் சூழலில், 10 ஆண்டுகளாக வலுவான வெற்றிக்காகக் காத்திருந்த சூர்யாவுக்கு, 'கருப்பு' மற்றும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படங்களின் அதிரடி வெற்றிக்குப் பின் இந்த 2026-ம் ஆண்டு ரூ.1,000 கோடி பாக்ஸ் ஆபிஸ் உச்சத்தைத் தொடும் அதிர்ஷ்ட ஆண்டாக மாறுமா? என்பதுதான் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒரே ஆண்டில் ரூ.1000 கோடி வசூல் வேட்டை? சாத்தியமா?
இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான '2.0' மற்றும் 'காலா' ஆகிய படங்கள் மூலம் ஒரே ஆண்டில் சுமார் ரூ.860 கோடியும், விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' மற்றும் 'வாரிசு' திரைப்படங்கள் மூலம் சுமார் ரூ.900 கோடியும் வசூலானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை தமிழ் திரையுலகில் எந்த முன்னணி நடிகரும் ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி மைல்கல்லை எட்டாத நிலையில், சூர்யாவுக்கு அந்த வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

