MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Mookuthi Amman 2 Controversy : சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் டீசரை பார்த்த நெட்டிசன்கள் நெகடிவ் கமெண்ட்களை அள்ளிவீசி வருகின்றனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 16 2026, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மூக்குத்தி அம்மன் 2 சர்ச்சை
Image Credit : instagram

மூக்குத்தி அம்மன் 2 சர்ச்சை

நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நேரடியாக ஓடிடியில் வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜியே இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நயன்தாரா, ரெஜினா, ஊர்வசி, துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் மீது ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

Nayanthara Photos : இன்ஸ்டாவில் வைரலாகும் நயன்தாராவின் திருமண நாள் புகைப்படங்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
100 கோடி பட்ஜெட்
Image Credit : instagram

100 கோடி பட்ஜெட்

குறிப்பாக படத்தில் வி.எஃப்.எக்ஸ் (VFX) மற்றும் சிஜிஐ (CGI) காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் காரணமாக படத்தின் பணிகள் நீண்ட காலம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள சில வி.எஃப்.எக்ஸ் மற்றும் சிஜிஐ காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன.

34
டீசரால் வெடித்த சர்ச்சை
Image Credit : instagram

டீசரால் வெடித்த சர்ச்சை

டீசரை பார்த்த சில நெட்டிசன்கள், “இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் கிராபிக்ஸ் இப்படித்தானா இருக்கும்?”, “முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் தொடர்பே இல்லாதது போல இருக்கிறது”, “ஏஐ மூலம் உருவாக்கிய வீடியோவைப் போல இருக்கிறது” என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதே சமயம், இது வெறும் டீசர் மட்டுமே என்றும், படத்தின் முழுமையான வி.எஃப்.எக்ஸ் பணிகளை டீசரில் இடம்பெற்ற காட்சிகளை மட்டும் வைத்து மதிப்பிடுவது சரியாக இருக்காது என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் திரையரங்குகளில் வெளியாகும்போது இறுதி கிராபிக்ஸ் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே முழுமையான முடிவுக்கு வர வேண்டும் என்பதும் அவர்களது வாதமாக உள்ளது.

44
தீபாவளிக்கு ரிலீஸ்
Image Credit : Vels Film International X Page

தீபாவளிக்கு ரிலீஸ்

முதல் பாகத்தின் வெற்றி காரணமாக ‘மூக்குத்தி அம்மன் 2’ மீது ஏற்கனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது டீசர் வி.எஃப்.எக்ஸ் தொடர்பான விமர்சனங்கள் படக்குழுவுக்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல் பாகத்தில் எளிமையான காட்சிகள், நகைச்சுவை மற்றும் நயன்தாராவின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் பிரம்மாண்டமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால், இந்த புதிய முயற்சி ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்பது படம் வெளியாகும்போது தான் தெரியவரும். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

Diwali Movies : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க... அடுத்தடுத்து தீபாவளி ரேஸில் குதித்த 4 பிரம்மாண்ட படங்கள்...!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மூக்குத்தி அம்மன் 2
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fauzi : சுபாஷ் சந்திரபோஸின் சீக்ரெட் ஸ்பையாக பிரபாஸ்... ஃபௌஜி படத்தின் வேற லெவல் டீசரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா.. !
Recommended image2
Scene First Review : சூர்யாவின் சீன் படம் பிளாஸ்டா? வேஸ்டா? முதல் விமர்சனம் இதோ
Recommended image3
சிம்புவுக்கு எப்போ கல்யாணம்? அனிருத்தின் திருமணத்தை கணித்த ஜோதிடரின் கணிப்பால் ஷாக் ஆன STR ரசிகர்கள்
Related Stories
Recommended image1
சுவாமி கும்பிட்டு படப்பிடிப்பை முடித்த நயன்தாரா! மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அப்டேட் Ready!
Recommended image2
நயன்தாரா நடிச்சாலும் இவங்க வேணும்? 'மூக்குத்தி அம்மன் 2'-வில் சென்டிமெண்டாக உள்ளே வந்த நடிகை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved