Mookuthi Amman 2 Shooting Wrapped : மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா முன்னணி ரோலில் நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்குமா அல்லது சுந்தர் சியின் வழக்கமான த்ரில்லர் படமாக இருக்குமா என்று கேள்வி எழுந்த நிலையில் படக்குழுவினரை வைத்து பார்க்கையில் இந்தப் படம் அரண்மனை படத்தின் 5ஆவது பாகமாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஐசரி கணேஷ் மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் நயன்தாரா உடன் இணைந்து ஊர்வசி, சினேகா, ரெஜினா கஸாண்ட்ரா, துணியா விஜய், யோகி பாபு, சிங்கம்புலி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, நிதின் சத்யா, ராமசந்திர ராஜூ என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 60 நாட்கள் 2000 தொழில்நுட்ப கலைஞர்கள் உதவியுடன் இந்தப் படம் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் நகைச்சுவை பக்தி என்று கலந்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் ஃபேமிலி என்டேர்டைன்மென்ட் படமாக இருக்க எதிர்பார்ப்பை பெற்று வருகிறது.

Scroll to load tweet…

முதலில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் 2020ல் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர் மத்தியில் வெற்றி படமாக்கப்பட்டது அதில் அவரும் நடித்திருப்பார். தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் சுந்தர் சி இயக்கியுள்ளதா ஆனால் அந்த கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தமில்லை அது வேற கதை இது வேற கதை என்றும் கூறப்படுகிறது. ரசிகர்களின் விமர்சனம்: ரசிகர்கள் தற்போது மூக்குத்தி அம்மன் படம் 2 எடுக்கப்பட்டு அதன் பிறகு அதே ஒட்டு மீசையோடு யோகி பாபு , குஷ்பூ சாமியார் எல்லாம் அதே வைத்து அரண்மனை 5 இன்னும் ஒரு வருஷம் கழித்து வெளியாக இருக்கும் என்றும் ஒரே கதையாக தான் இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.