- Home
- Cinema
- நயன்தாரா நடிச்சாலும் இவங்க வேணும்? 'மூக்குத்தி அம்மன் 2'-வில் சென்டிமெண்டாக உள்ளே வந்த நடிகை!
நயன்தாரா நடிச்சாலும் இவங்க வேணும்? 'மூக்குத்தி அம்மன் 2'-வில் சென்டிமெண்டாக உள்ளே வந்த நடிகை!
Sundar C Sentiment in Mookuthi Amman 2: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடித்து வரும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் சென்டிமெண்டுக்காகவே பிரபல நடிகையை, சுந்தர் சி டான்ஸ் டான்ஸ் ஆட வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மூக்குத்தி அம்மன் 2
சில மாதங்களுக்கு முன், சுமார் 1 கோடி செலவில் செட் அமைத்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜையை போட்டார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். 'மூக்குத்தி அம்மன்' படத்தின் முதல் பாகத்தை நடிகரும், இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கி இருந்த நிலையில், அவர் தற்போது 'கருப்பு' படத்தில் பிசியாகி விட்டதால், 'அரண்மனை' படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி அசால்டாக 100 கோடி வசூல் கொடுத்த, இயக்குனர் சுந்தர் சி-யை வைத்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை தயாரிக்க ஐசரி கணேஷ் முடிவு செய்தார்.
தனுஷின் குபேரா முதல் புஷ்பா 2 வரை ஆஸ்கர் ரேஸில் குதித்த படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
சுந்தர் சி - நயன்தாரா சண்டை:
நயன்தாராவை அம்மனாக வைத்து, சுந்தர் சி கூறிய கதை பிடித்து போனதால்... மகளின் திருமண ஏற்பாடுகளுக்கு நடுவே, ஐசரி கணேஷ் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பூஜை போடப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா சுந்தர் சி-யை மதிக்காமல் நடந்து கொண்டதாகவும், இதன் காரணமாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. பின்னர் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என குஷ்பு விளக்கம் கொடுத்தார்.
மூக்குத்தி அம்மன் 2 கிளைமேக்ஸ்:
இதை தொடர்ந்து, 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கிளைமாக்ஸ் காட்சியை சென்னை ஈசிஆர் பகுதியில் சுந்தர் சி படமாக்கி வருகிறார். பொதுவாக சுந்தர். சி எடுக்கும் , பேய் படங்களில் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இந்த படத்திற்கும் அது விதிவிலக்கு அல்ல. பெரிய செட் அமைக்கப்பட்டு, திருவிழா போல் ஆயிரம் துணைநடிகர்களுக்கு மத்தியில் இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.
சுந்தர் சி-யின் செண்டிமெண்ட்:
மேலும் சென்டிமெண்டாக இந்த படத்தில், தன்னுடைய மனைவியும் - நடிகையுமான குஷ்பூவை ஆடவைக்க சுந்தர் சி திட்டமிட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. என்ன தான் நயன்தாரா இந்த படத்தில் இருந்தாலும்... குஷ்புவை இந்த படத்தில் டான்ஸ் ஆட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அவருக்காகவே ஒரு பாடலையும் வைத்துள்ளாராம் சுந்தர் சி. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அரண்மனை 4ல் சிம்ரன் மற்றும் குஷ்பு இணைந்து சிறப்பு தோற்றத்தில் டான்ஸ் ஆடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூக்குத்தி அம்மன் 2 பல மொழிகளில் ரிலீஸ்:
இதுவரை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த படங்களை விட மிகவும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தில், நயன்தாராவுடன் இணைத்து மீனா, ரெஜினா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை தமிழில் தவிர மற்ற மொழிகளிலும் ரிலீஸ் பண்ண படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.