“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்குமார், கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார். ஐதராபாத், சென்னை என மாறி, மாறி ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 

இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா என்பவரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்திருந்தது.

இதையும் படிங்க: கொரோனா ஊரடங்கு... பிரசவ வலியில் கதறி துடித்த கர்ப்பிணிக்கு உதவிய நடிகை ரோஜா...!

இந்த படத்தில் முதன் முறையாக இந்தி நடிகை ஹியூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ளார். தல அஜித்திற்கு இணையாக ஹியூமா குரேஷி பைக் சேசிங் காட்சிகளில் பறந்து, பறந்து சண்டையிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதுதான் வலிமை படம் குறித்து தல ஃபேன்ஸுக்கு கிடைத்த கடைசி அப்டேட். அதன் பின்னர் கொரோனாவால் ஒட்டுமொத்த திரையுலகமே முடங்கிவிட்டது. 

இதையும் படிங்க: காதலருடன் டாப்லெஸ் போட்டோ, கொரோனா முத்தம்.... வீட்டில் இருக்க சொன்னால் ஆபாச நடிகையின் அட்டகாசம்...!

இந்நிலையில், “வலிமை” படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ஒன்று தல ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இப்படம் வரும் 2020 தீபாவளிக்கு வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது இந்த படம் 2021ம் ஆண்டு பொங்கலுக்குத் தான் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.