கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இன்னும் பொதுச்சமூகத்தில் பரவவில்லை என்ற ஒரே ஆறுதலுடன், மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளன. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ நெருங்கிய நிலையில், நாடு முழுவதும் நேற்றிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா செய்த காரியம் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ரோஜா, தீவிர அரசியலில் இறங்கினார். தற்போது ஆந்திராவின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். 

இதையும் படிங்க: என்னது இது கொரோனா மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டிருக்கீங்க... சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நகரி தொகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவ வலியுடன் கர்ப்பிணி ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். ஆனால் அந்த மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதற்கான வசதி இல்லை என்று கூறப்படுகிறது. அப்போது தனது தொகுதி மக்களின் நிலை குறித்து அறிவதற்காக மருத்துவமனை வந்த ரோஜாவிற்கு இந்த செய்தி சென்றடைந்துள்ளது. 

இதையும் படிங்க: 5 லிட்டர் சானிடைசருடன் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த பார்த்திபன்... எதற்காக தெரியுமா?
உடனடியாக அந்த கர்ப்பிணி பெண்ணை திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கும் படி தனது காரிலேயே அனுப்பி வைத்துள்ளார். ஆம்புலன்ஸ் கிடைக்க தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் எம்.எல்.ஏ. ரோஜா செய்த உதவியால் கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் அவருக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.