இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த கொடூர வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் புயல் வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நேற்று இரவுவரை கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.


இந்த நெருக்கடியான நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுற்றி கொரோனாவை தடுக்க போராடி வருகிறார். மருத்துவர்களுடன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை, தினமும் செய்தியாளர்கள் சந்திப்பு என பரபரப்பாக இயங்கிவருகிறார். 

இதையும் படிங்க: என்னது இது கொரோனா மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டிருக்கீங்க... சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

தன் குடும்பம் மற்றும் குழந்தைகளை கூட பார்க்காமல் தமிழக மக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்து வரும் விஜய பாஸ்கரை நடுநிலையாளர்கள் பலரும் வாழும் போதி தர்மர் என்று பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....!

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்த புகைப்படத்தை நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன்,“சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” என்று பதிவிட்டுள்ளார்.