MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • முதல் முறையாக 100 சிக்ஸர்கள் விளாசி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சாதனை!

முதல் முறையாக 100 சிக்ஸர்கள் விளாசி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சாதனை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 100 சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Apr 26 2024, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 41ஆவது லீக் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்னும், ரஜத் படிதார் 50 ரன்னும் எடுத்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

பின்னர், 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஹெட் முதல் ஓவரிலேயே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து அபிஷேக் சர்மா 31 ரன்னிலும், எய்டன் மார்க்ரம் 7 ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக சன்ரைசர்ஸ் 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.

36
Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

நிதிஷ் குமார் ரெட்டி 13, அப்துல் சமாத் 10 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிரடியாக ஆரம்பித்தார். 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்களில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் வெளியேற, ஷாபாஸ் அகமது நிதானமாக விளையாடி 37 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ஜெயதேவ் உனத்கட் 8 ரன்கள் எடுத்தார்.

46
Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

இதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுவரையில் சொந்த மண்ணில் ஹைதராபாத் தோற்காத நிலையில், இந்தப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

56
Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

இந்த நிலையில், இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா சிக்ஸர் அடித்ததன் மூலமாக 100 சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு 89 சிக்ஸர்கள் விளாசிய ஹைதராபாத், 2018 ஆம் ஆண்டு 88 சிக்ஸர்கள் விளாசியுள்ளது. இதே போன்று கடந்த 2022 ஆம் ஆண்டு 97 சிக்ஸர்கள் விளாசியுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக இந்த ஆண்டு 8 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 100 சிக்ஸர்கள் விளாசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

66
SRH vs RCB, IPL 2024

SRH vs RCB, IPL 2024

இதுவரையில் நடந்த 8 போட்டிகளில் ஹைதராபாத்108 சிக்ஸர்களும், ஆர்சிபி 9 போட்டிகளில் 90 சிக்ஸர்களும், டெல்லி கேபிடல்ஸ் 9 போட்டிகளில் 86 சிக்ஸர்களும், மும்பை இந்தியன்ஸ் 8 போட்டிகளில் 85 சிக்ஸர்களும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 போட்டிகளில் 69 சிக்ஸர்களும், சிஎஸ்கே 8 போட்டிகளில் 65 சிக்ஸர்களும், ஆர்ஆர் 8 போட்டிகளில் 64 சிக்ஸர்களும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 8 போட்டிகளில் 62 சிக்ஸர்களும், பிபிகேஎஸ் 8 போட்டிகளில் 61 சிக்ஸர்களும், குஜராத் டைட்டன்ஸ் 9 போட்டிகளில் 39 சிக்ஸர்களும் விளாசியுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
விராட் கோலி
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG Test: அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்! மாஸ் காட்டிய மானவ் சுதார்! யார் இந்த 'குட்டி' ஜடேஜா!
Recommended image2
Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸை விட்டு வௌியேறும் சூர்யகுமார் யாதவ்..? இன்ஸ்டாவில் அதிரடி!
Recommended image3
Rishabh Pant: பன்ட் அடிச்ச சிக்ஸால் டிரோன் காலி? வைரல் வீடியோவின் உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved