Asianet News TamilAsianet News Tamil

Samuthirakani : சீரியல் to சினிமா.. ஆடம்பர கார்கள்.. ரசிகர்களை வியக்க வைக்கும் Net Worthஐ கொண்ட சமுத்திரக்கனி!

Actor Samuthirakani : இயக்குனர் நாகாவின் இயக்கத்தில் ஒளிபரப்பான ரமணி vs ரமணி என்ற நாடகத்தின் மூலம் தனது கலைப்பயணத்தை துவங்கிய மாபெரும் இயக்குனர் மற்றும் நடிகர் தான் சமுத்திரக்கனி.

Serial to Cinema extraordinary growth of actor and director samuthirakani see whats is his net worth ans
Author
First Published Apr 26, 2024, 2:42 PM IST

இயக்குனர் பாலச்சந்திரன் தயாரிப்பில் உருவான நாடகங்களில் நடிக்க துவங்கிய சமுத்திரக்கனி, கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "பார்த்தாலே பரவசம்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். அந்த படத்தில், மறைந்த நடிகர் விவேக் உடனான அவருடைய நடிப்பு இன்றளவும் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. 

அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான "சுப்பிரமணியபுரம்" என்கின்ற மெகாஹிட் திரைப்படத்தின் மூலம் பெரிய அளவில் கவனம் பெற்றார் சமுத்திரக்கனி. கடந்த 24 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி தற்பொழுது தமிழை காட்டிலும் தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்து வருகின்றார். 

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகும் ராம சரணின் "கேம் சேஞ்சர்" திரைப்படத்திலும், தமிழில் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள "இந்தியன் 2" படத்திலும் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான "உன்னைத் சரணடைந்தேன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் சமுத்திரக்கனி.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கலைதுறையில் பயணித்து வரும் சமுத்திர கனி அவர்களின் சொத்து மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை சம்பளம் வாங்கும் சமுத்திரக்கனியிடம் ஆடி ஏ4 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 போன்ற சொகுசு கார்களும் உள்ளது. அவர் வசிக்கும் வீடும் சில கோடிகள் மதிக்கத்தக்க வீடு என்று கூறப்படுகிறது.

கடந்த 1973 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் பிறந்த இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி, கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றவராவார். அது மட்டும் இல்லாமல் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அவர் சட்டம் பயின்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவருக்கு சினிமா மீது இருந்த ஆசை, அவரை இன்று ஒரு மாபெரும் இயக்குனராகவும் நடிகராகவும் மாற்றியுள்ளது.

Successful Directors : தொட்டதெல்லாம் ஹிட்டு... தோல்வியே பார்க்காத டாப் 5 சக்சஸ்புல் இயக்குனர்கள் லிஸ்ட் இதோ

Follow Us:
Download App:
  • android
  • ios