Successful Directors : தொட்டதெல்லாம் ஹிட்டு... தோல்வியே பார்க்காத டாப் 5 சக்சஸ்புல் இயக்குனர்கள் லிஸ்ட் இதோ
இயக்கிய அனைத்து படங்களும் ஹிட் கொடுத்து, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கெத்து காட்டிய படங்களை இயக்கிய டக்கரான டாப் 5 இயக்குனர்கள் பற்றி பார்க்கலாம்.
திரைப்படங்களின் வெற்றி, தோல்வி என்பது அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை வைத்து தான் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் தென்னிந்திய திரையுலகில் இதுவரை தோல்வியே சந்திக்காமல், தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ள டாப் 5 டக்கரான இயக்குனர்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ராஜமவுலி
பிரம்மாண்ட படங்கள் என்றால் ஷங்கர் என இருந்த காலகட்டம் போய் தற்போது பிரம்மாண்ட படங்கள் என்றாலே ராஜமவுலி தான் என சொல்லும் அளவுக்கு தொடர்ச்சியாக மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் ராஜமவுலி. அவர் தன்னுடைய 23 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் வெறும் 12 படங்களை தான் இயக்கி உள்ளார். ஆனால் அந்த 12 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை ருசித்த படங்களாகும். அதிலும் அவர் இயக்கிய பாகுபலி 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தன.
பிரசாந்த் நீல்
கே.ஜி.எப் என்கிற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கன்னட திரையுலகம் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் தான் பிரசாந்த் நீல். இவர் இதுவரை உக்ரம், கேஜிஎப் 1, கேஜிஎப் 2 மற்றும் சலார் ஆகிய நான்கு படங்களை இயக்கி உள்ளார். இந்த நான்கு படங்களுமே மாஸ் ஹிட் அடித்தன. கடைசியாக அவர் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சலார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. இதன்மூலம் நூறு சதவீத வெற்றியுடன் பயணித்து வருகிறார் பிரசாந்த் நீல்.
இதையும் படியுங்கள்... Rathnam Review : ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் - ஹரி கூட்டணி... ரத்னம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
வெற்றிமாறன்
கோலிவுட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் தான் வெற்றிமாறன். பாலு மகேந்திரா என்கிற மாபெரும் கலைஞரின் பள்ளியில் இருந்து வந்த இவர், கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவர் அறிமுகமாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலகட்டத்தில் வெறும் ஆறு படங்களை மட்டுமே வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். அந்த ஆறு படங்களுமே காலம் கடந்து கொண்டாடப்படும் மாஸ்டர் பீஸ் படங்களாகும். இவரும் இதுவரை தோல்வியே சந்தித்ததில்லை.
அட்லீ
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனான அட்லீ, ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, கடந்த ஆண்டு பாலிவுட்டுக்கு சென்று அங்கு ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற பிரம்மாண்ட வெற்றிப்படத்தை கொடுத்தார். அப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் வேட்டை ஆடியது. இவரும் இதுவரை பிளாப் படங்களே கொடுக்கவில்லை.
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷனாக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த லோகேஷ், பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து நான்கு மாஸ் ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் கோலிவுட்டின் டாப் இயக்குனராக உயர்ந்தார். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட்டானது. இவரும் 100 சதவீத ஹிட் படங்களுடன் வலம் வருகிறார்.
இதையும் படியுங்கள்... Manimegalai : சின்னத்திரையை கலக்கும் நட்சத்திர ஜோடி.. ஹுசைன், மணிமேகலையின் யூடியூப் வருமானம் எவ்வளவு தெரியுமா?