10 தடவை கீழே விழுந்தால் 11வது முறை எழுந்திருப்பார்கள்.. கேரளாவில் தாமரை மலரனும்- கீர்த்தி சுரேஷ் தாயார் அதிரடி
10 தடவை கிழே விழும் போது 11வது முறை எழுந்திருக்க மாட்டார்களா.? எனவே தமிழகம் மற்றும் கேராளவில் பாஜக ஆட்சிக்கு வரும் என நடிகை கீர்த்தி சுரேஷ் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மாற்றம் வேண்டும்
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் இன்று 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று தனது வாக்கினை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரபல நடிகை கீர்த்தி சரேஷ் தாயார் மேனகா கூறுகையில், கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும், ஒரே செயல்முறையில் இருப்பது நல்லதல்ல, கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தாலே தெரியும்.
தாமரை மலரனும்
அதில் இருந்து புதிய ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும். அப்போ தான் புதிய ஆட்சியை பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும், 15 வருடமாக கேரளாவில் இருந்த ஆட்சிகள் தவிர மாறி புதிய ஆட்சி வரனும். என்னைய பொறுத்தவரை தாமரைமலர வேண்டும் அதுவே எனது ஆசை என தெரிவித்தார். அப்போது மாற்றம் வர வேண்டும் என தெரிவித்துள்ளீர்கள், மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியில் உள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கேரளாவில் இதுவரை பாஜக வரவில்லை. இங்கு எல்டிஎப், யூடிஎப் இருந்து வருகிறது. மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும். இவர்கள் தான் மாறி, மாறி இருக்கிறார்கள்.
பாஜக ஆட்சி வரும்
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள் பாஜகவை புறக்கணிக்கிறாங்களே என்ற கேள்விக்கு பதில் அளித்தர், 10 தடவை கிழே விழும் போது 11வது முறை எழுந்திருக்க மாட்டார்களா.? எனவே பாஜக ஆட்சிக்கு வரும். கேரளாவில் தாமரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருச்சூர் , திருவனந்தபுரம் தாமரை வெற்றி பெறும். சுரேஷ்கோபி வெற்றி பெறுவார். பொதுமக்களிடம் பேசும் போது தெரிகிறது என கீர்த்தி சுரேஷ் தாய் மேனகா தெரிவித்தார்.
மதுபோதையில் பெண் VAO வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக நிர்வாகி ராஜிவ்காந்தி... தட்டித்தூக்கிய போலீஸ்